மொபைல் போன்களுக்கு 10 இலக்க எண்களுக்கு பதிலாக 11 இலக்க எண்களை அறிமுகம் செய்ய மத்திய தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப் படுத்திய தொலை தொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது.
ஆனால் மொபைல் போன் பயன்பாடு மற்றும் தொலை தொடர்பு துறையின் அசுரவேக வளர்ச்சியால் மொபைல்போன் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இதனால் மொபைல் போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் விரைவில் சிக்கல் ஏற்படலாம்.
இதனை கருத்தில் கொண்டு விரைவில் 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த தொலை தொடர்பு துறை முடிவு செய்து ள்ளது.