மத்திய பிரதேசத் தில் சிதி மாவட்டத்தில் ரேஷன் கடையில் மாதம் ரூ. ஆயிரத்து 200 சம்பளம் பெறும் விற்பனையாளர், ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
லோக்ஆயுக்தா சிறப்பு போலீசார் ரேஷன் கடை ஊழியர் சுரேஷ் பாண்டேயின் வீட்டை சோதனை யிட்டனர்.
அப்போது அவருக்கு கென்தவா, பராவகா, உத்தர் கரான்துயா ஆகிய ஊர்களில் சொந்த வீடு இருப்பதை கண்டு பிடித்தனர். அத்துடன் சிதி மாவட்டத்தில் பல கிராமங்களில் விவசாய நிலம் இருப்பதும் தெரிய வந்தது.
இத்துடன் சிமாரியா என்ற ஊரில் வீடு, இரண்டு கார்கள் உட்பட நான்கு வாகனங்கள் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம்,
வெள்ளி நகைகள் இருப்பதும் தெரிய வந்தது. இவருக்கும், இவரது மனைவிக்கும் ஆறு வங்கி களில் எட்டு கணக்கு கள் உள்ளன. இந்த திடீர் சோதனை பற்றி லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸ் தரப்பில் கூறுகையில்,
இது வரை ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களின் வங்கி கணக்குகளை ஆராயும் போது, இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
1996ல் ரேஷன் கடை ஊழியராக சுரேஷ் பாண்டே வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2007 வரை மாத சம்பளம் ரூ.300 மட்டுமே. அதன் பின் சம்பளம் ரூ.1,200 ஆக அதிகரித்துள்ளது.
இந்த கால கட்டத்தில் சுரேஷ் பாண்டே, மொத்தம் சம்பளமாக ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் பெற்று இருப்பார்.
ஆனால் சோதனையில் பல மடங்கு சொத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. இவர் மீது வருமான த்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.