சென்னை ஐகோர்ட் டின் மொத்த நீதிபதி பணியிட ங்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. சமீபத்தில் இந்த எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. ஆனாலும் 39 நீதிபதிகள் மட்டுமே இருந்த நிலையில்
காலியாக உள்ள நீதிபதி பணியிட ங்களில் நியமிக்க 19 வக்கீல்கள், 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை கொண்ட பட்டியலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமை யிலான நீதிபதிகள் குழு மத்திய சட்ட அமைச்ச கத்திற்கு அனுப்பி வைத்தி ருந்தது.
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 15 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் உத்தர விட்டார்.
இதன் படி, இந்த புதிய நீதிபதிகள் 15 பேரும் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ஐகோர்ட்டில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக பதவி ஏற்றுகொண்ட நீதிபதிகளின் வாழ்க்கை குறிப்பு பின்வருமாறு:
நீதிபதி வி.பார்த்திபன்
நீதிபதி வி.பார்த்திபன், சிதம்பரத்தில் 1960-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் வி.வாசு தேவன், டி.மங்கையர் கரசி. சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியிலும்,
கோடம் பாக்கம் அரசு பள்ளிக் கூடத்திலும் பள்ளிப்படிப்பை முடித்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில மும், மெட்ராஸ் சட்டக் கல்லூரி யில் சட்டப் படிப்பையும் முடித்தார்.
1986-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, வக்கீல் என்.ஜி.ஆர். பிரசாத்திடம் ஜூனியராக சில காலம் பணி யாற்றினார். பின்னர் தனியாக சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.
நீதிபதி ஆர்.சுப்பிர மணியன்
நீதிபதி ஆர்.சுப்பிர மணியன், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள மன்னங்காடு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1963-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி பிறந்தார்.
இவரது பெற்றோர் கே.வி.ராஜ கோபாலன், ஆர்.சாரதா ம்மாள். கே.வி. ராஜ கோபாலன் விவசாயி.
தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் உள்ள ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில், பி.காம். பட்டப் படிப்பையும், புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி யில் சட்டப் படிப்பையும் முடித்தார்.
நீதிபதி ஆர்.சுப்பிரமணி யனுக்கு, உஷா என்ற மனைவியும், ஆதர்ஷ் சுப்பிரமணியன் என்ற மகனும் உள்ளனர். மகன் தற்போது பெங்களூரு வில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
நீதிபதி எம்.கோவிந்தராஜ்
நீதிபதி எம்.கோவிந்தராஜ், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை சேர்ந்தவர். 1960-ம் ஆண்டு பிறந்தார் இவரது பெற்றோர் ஆர்.முத்துராமன், இந்திராணி. தந்தை ஆர்.
முத்து ராமன், திருத்துறைப் பூண்டி அரசு பள்ளிக் கூடத்தில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். நீதிபதி கோவிந்தராஜின் தாத்தா ஏ.ஜி.ராஜ கோபால் நாயுடு, சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.
திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, 1988-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். முதலில் வக்கீல் என்.கண்ணன், பின்னர் மூத்த வக்கீல் விஜய நாராயணன் ஆகியோ ரிடம் ஜூனியராக பணி யாற்றினார்.
நீதிபதி ஜி.கோவிந்தராஜின் மனைவி டாக்டர் பி.ஜெயந்தி, மீனாட்சி அம்மன் பல்மருத்துவ கல்லூரியில், உயிர் வேதியியல் பிரிவின் தலை வராக உள்ளார்.
நீதிபதி எம்.சுந்தர்
சென்னை யை சேர்ந்த நீதிபதி எம்.சுந்தர், 1966-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் எஸ்.டி. மூர்த்தி, டி.ஆர்.நவநீதம். சட்டப்படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி யிலும், முதுகலை சமூகவியல் படிப்பை அண்ணா மலை பல்கலைக் கழகத்தி லும் முடித்தார்.
வக்கீலாக 1989-ம் ஆண்டு பதிவு செய்து, மூத்த வக்கீல் அப்துல்ரசாக்கிடம் ஜூனிய ராக பணியாற் றினார். இவரது மனைவி லட்சுமி சுந்தர் டாக்டராக பணியாற் றுகிறார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரக் கோட்டை கிராமத்தில் 1964-ம் ஆண்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறந்தார். இவரது பெற்றோர் சி.ராமசந்திரன், ஆர்.சந்திரம்மாள். நீதிபதி ஆர்.சுரேஷ் குமாரின் தந்தை சி.ராமசந்திரன்,
வல்லத்திரக் கோட்டை கிராம பஞ்சாயத் தின் தலைவர் பதவியை சுமார் 40 ஆண்டுகள் வகித் துள்ளார். புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டபடிப்பும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.
1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.), மத்திய, மாநில அரசுக ளுக்கும் வக்கீலாக பணியாற் றியுள்ளார். இவரது மனைவி ராஜேஸ் வரியும் வக்கீலாக உள்ளார்.
நீதிபதி ஜெ.நிஷா பானு
கன்னியா குமாரி மாவட்டம், நாகர் கோவிலில் 1966-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி நீதிபதி நிஷா பானு பிறந்தார். இவரது பெற்றோர் ஜெனிஸ்டன் தேவிராஜ், ஜெ.ஜீவரத் தினம்.
நீதிபதி நிஷா பானு, 1990-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல்கள் கோவிந்தராஜ், ஜோ.ஜெயநாதன், லியாகத் அலி ஆகியோ ரிடம் ஜூனியராக பணியா ற்றினார். பின்னர் தனியாக வக்கீல் தொழில் செய்தார்.
சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவ ராகவும், தமிழ்நாடு பெண் வக்கீல்க ள் கூட்டமைப்பு என்ற சங்கத்தின் செயலாள ராகவும் பதவி வகித்து ள்ளார்.
ஐகோர்ட்டு பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் குழுவின் உறுப்பின ராகவும் இருந்துள்ளார். நீதிபதி நிஷா பானுவுக்கு, எல்.தயாகாந்த் கெவின்ராய், எல்.சூரியகாந்த் சிபின்ராய் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்
சென்னை யை சேர்ந்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 1963-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் எம்.செல்வநாதன், மோகனா செல்வநாதன்.
நீதிபதியின் தந்தை எம்.செல்வநாதன், வானிலை ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணி யாற்றி ஓய்வுப் பெற்றவர். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1991-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். தொழிலாளர்
சட்டம், அரசு பணியாளர் பணி சட்டம், சிவில், கிரிமினல் உள்ளிட்ட பல விதமான வழக்கு களில் ஆஜராகி யுள்ளார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷின் மனைவி அர்ச்சனா ரமேஷ், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.
எஸ்.எம்.சுப்பிரமணியன்
நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் 1965-ம் ஆண்டு மே 31-ந் தேதி பிறந்தார். 1991-ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்தார். மூத்த வக்கீல் கே.துரைசாமியிடம் ஜூனியராக பணியாற் றினார்.
1992-ம் ஆண்டு முதல் தனியாக வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா சுப்பிர மணியம் வக்கீலாக உள்ளார். மகள் சுவாதி சுப்பிர மணியம், சீர்மிகு சட்டக் கல்லூ ரியில் சட்டம் படித்து வருகிறார்.
நீதிபதி அனிதா சுமந்த்
நீதிபதி அனிதா சுமந்த், சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக இருந்த வி.ராமசந் திரனின் மகள் ஆவார். இவரது தாயார் பெயர் பத்மா ராமசந்திரன். 1970-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி நீதிபதி அனிதா சுமந்த் பிறந்தார்.
சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலமும், சென்னை சட்டக் கல்லூரி யில் சட்டப் படிப்பையும், சென்னை பல்கலைக் கழகத்தில்
அரசிய லமைப்பு சட்டத்தின் முதுகலை பட்டப் படிப்பையும் முடித்தார். பெங்க ளூ ரில் உள்ள நேஷனல் சட்டக் கல்லூரி யில் முனைவர் பட்டம் பெற்றார்.
1993-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, தன் தந்தையான மூத்த வக்கீல் வி.ராமசந்திரனிடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு, தீர்ப்பாயம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் ஆஜராகினார். தமிழக அரசின் சிறப்பு அரசு பிளடராக (வரி) பணியாற்றி வந்தார்.
நீதிபதி எம்.ஏ.பஷீர் அகமது
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே யுள்ள சிங்கம் பத்து கிராமத்தி ல் 1956-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி நீதிபதி எம்.ஏ.பஷீர் அகமது பிறந்தார். இவரது பெற்றோர் ஓ.எம்.ஏ.மஜித், பி.மரியா மிஸ்ரியா.
பி.எஸ்.சி. பட்டப்ப டிப்பை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி யிலும் (1977- 1980 ஆண்டுகளில்) முடித்து ள்ளார். மதுரை சட்டக்கல் லூரியில் சட்டம் படிப்பை முடித்து, 1981-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார்.
1988-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங் களில் நீதிபதியாக பணியாற்றி யுள்ளார். நீதிபதி பஷிர் அகமது மனைவி யின் பெயர் முகமது பாத்து. இவர்களு க்கு பெனாசீர் மரியம், நவ்சாத் பாத்திமா என்ற இரு மகள்கள்.
நீதிபதி டி.ரவீந்திரன்
சென்னையில் 1959-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி நீதிபதி டி.ரவீந்திரன் பிறந்தார். இவரது தந்தை எச்.டி.துக் காராம், போலீஸ் கூடுதல் சூப்பிரண் டாக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். தாயார் டி.சுகுணா.
1983-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் வி.சண்முக சுந்தரத்திடம் ஜூனியராக சேர்ந்தார். 1988-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப் பட்டு, படிப்படி யாக பதவி உயர்வு பெற்று,
தற்போது சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாள ராக உள்ளார். இவருக்கு ஆர்.மகால ட்சுமி என்ற மனைவியும், ஆர்.சித்தார்த் என்ற மகனும் உள்ளனர்.
நீதிபதி எஸ்.பாஸ்கரன்
திருவா ரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியை 1956-ம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதி நீதிபதி எஸ்.பாஸ் கரன் பிறந்தார். இவரது பெற்றோர் வி.சாமியப்பா, எஸ்.பர்வதம்.
தந்தை சாமியப்பா, மாவட்ட நீதிபதியாக பணியா ற்றி ஓய்வுப் பெற்றவர். எஸ்.பாஸ்கரன் 1988-ம் ஆண்டு சிவில் நீதிபதி யாக தேர்வு செய்யப் பட்டு, 2001-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி யாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ங்களில் பணியாற்றி இவர், நீதிபதிகள் சங்கத்தின் பொருளாளர், செயலாளர், தலைவர் ஆகிய பதவிகளை வகித்து ள்ளார். நீதிபதி எஸ்.பாஸ்கர னுக்கு ரேவதி என்ற மனைவியும், சவுமியா, சரண்யா என்ற மகள்களும் உள்ளனர்.
நீதிபதி பி.வேல்முருகன்
திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பாடி கிராமத்தில் 1965-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி நீதிபதி பி.வேல் முருகன் பிறந்தார். இவரது பெற்றோர் டி.எஸ்.பெருமாள், சின்னதாயி.
டி.எஸ்.பெருமாள் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். 2005-ம் ஆண்டு நடந்த தேர்வில் மாவட்ட நீதிபதி யாக தேர்வு செய்ய ப்பட்டு, சிவகங்கை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல இடங்க ளில் மாவட்ட நீதிபதியாக பணியா ற்றினார்.
தற்போது ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பதிவாளராக பணியா ற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் சுதா, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி யில் பேராசிரிய ராக பணியாற் றுகிறார்.
நீதிபதி ஜி.ஜெயசந்திரன்
வேலூரில் 1965-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி நீதிபதி ஜி.ஜெயசந் திரன் பிறந்தார். இவரது பெற்றொர் ஆர்.கோபாலன், ஜி.ருக்மணி. 1988-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து,
மூத்த வக்கீல் என்.மீனாட்சி சுந்தரத்திட மும் (தற்போது ஐகோர்ட்டு நீதிபதி யாக இருக்கும் எம்.சத்திய நாராயண னின் தந்தையிடமும்) வக்கீல்கள் எம்.ஆர்.முத்துகிருஷ் ணன், டி.எஸ்.ராமசாமி, பி.ராஜ மாணிக்கம் ஆகியோரி டமும் ஜூனியராக பணியாற் றினார்.
ஐகோர்ட்டு நீதிபதியாக இருக்கும் பி.என்.பிரகாஷ், வக்கீல் ராஜேந்திரகுமார் ஆகியோருடனும் வக்கீலாக பணியாற்றியுள்ளார். 2004-ம் ஆண்டு நடந்த தேர்வில் மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப் பட்டார்.
பல்வேறு மாவட்டங் களில் நீதிபதியாக பணியா ற்றி ஜி.ஜெயசந்திரன், 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தமிழக சட்டத்து றை செயலாள ராக பணியாற் றினார். நீதிபதி ஜெயசந்திரனு க்கு லட்சுமி வைஷ் ணவி என்ற மனைவி உள்ளார்.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
சென்னை யில் 1964-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி நீதிபதி சி.வி.கார்த்தி கேயன் பிறந்தார். இவரது பெற்றோர் சி.வி.சிம்ஹ ராஜா, சாஸ்திரி சரஸ்வதி. 1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் வி.எஸ்.சுப்பிரமணி யனிடம் ஜூனியராக சேர்ந்தார்.
2005-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி யாக தேர்வு செய்யப் பட்டு ராமநாத புரம் மாவட் டத்தில் பணியா ற்றினார். தற்போது புதுச்சே ரியில் மாவட்ட முதன்மை நீதிபதி யாக பணியா ற்றி வருகிறார்.