விஜய் மல்லையா கையிருப்பு ரூ.16,440 இருப்பதாக அறிவிப்பு !

பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 
விஜய் மல்லையா கையிருப்பு ரூ.16,440 இருப்பதாக அறிவிப்பு !
கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா சென்று விட்டார். வழக்குகள் தொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறது. இதற் கிடையே, சொத்து விவரங்களை வெளியிட உத்தரவிட கோரியும் 

அவர் வெளியிடாததால், உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று நடை பெற்றது. 

அப்போது, விஜய் மல்லையா தனது சொத்து விவரங் களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. 
இதைய டுத்து அடுத்த கட்ட விசார ணையை வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிலையில், தனது சொத்து விவர ங்களை வெளியிட்டு விஜய் மல்லையா அறிக்கை ஒன்றை வெளியி ட்டுள்ளார். 

அதில் மார்ச் 31, 2016 ஆம் தேதியின் படி தன்னிடம் கையிருப்பு ரொக்கமாக 16,440 ரூபாய் இருப்பதாகவும்,  வங்கிகளில் வைக்கப் பட்டுள்ள வைப்புத் தொகை மொத்தம் ரூ.12.6 கோடி ரூபாய் உள்ள தாகவும் தெரிவித் துள்ளார்.

வங்கி வைப்புத் தொகையை தற்போது வருமானவரி த்துறை முடக்கி உள்ளதாகவும் தெரிவித் துள்ளார்.  
அதே போல், வெளி நாட்டு சொத்துக் களில் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை அளவுக்கு முதலீடா கவும் ரொக்கம் மற்றும் அதற்கு இணை யாகவும் உள்ளதாக தெரிவித் துள்ளார். 

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள வைப்புத் தொகை மற்றும் கையிருப்பு தொகை குறித்து விஜய் மல்லையா எதுவும் தெரிவிக்க வில்லை.
Tags:
Privacy and cookie settings