இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனம் ‘பார்தி ஏர்டெல்’. இந்நிறுவன த்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல். இவரின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியாகும்.
சமீபத்தில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவராக அடுத்த ஐந்தாண்டு களுக்கு மீண்டும் நியமிக்கப் பட்டார்.
இந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற ஏர்டெல் நிறுவன த்தின் 21ஆவது ஆண்டு பொதுக் கூட்ட த்தில் இதற் கான ஒப்புதல் வழங்கப் பட்டது. மிட்டல், சென்ற வருடம் ரூ.27.8 கோடி ஆண்டு வருமான மாகப் பெற்றார்.
இதில் ரூ.24.6 கோடி சம்பளமா கவும், ரூ.1.17 கோடி சலுகையா கவும் பெற்றார். நிறுவன த்தின் பொதுக் கூட்டத்தில், ஏர்டெல் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.ஈ.ஓ. கோபால் விட்டலுக் கும் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்க ப்பட்டு ள்ளது.
அதன்படி, கோபால் விட்டல் ஆண்டுக்கு ரூ.7 கோடி பெறுவார். ஜுன் 1ஆம் தேதி முதல் இவரின் பதவிக் காலம் (ஜனவரி 31, 2018) முடியும் வரை இந்தச் சம்பள உயர்வு அமல் படுத்தப் படும் என்றும் அறிவிக் கப்பட் டுள்ளது.
Tags: