சென்னையில் டேங்கர் லாரிகளை பகலில் 35 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.
கிண்டியில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 3 கல்லூரி மாண விகள் சில தினங்க ளுக்கு முன் இறந்தனர். இந்த சம்பவம் சென்னை யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதைத் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தண்ணீர் ஏற்றிச் செல்லும் லாரி,
கழிவுநீர் அகற்றும் லாரி மற்றும் எண்ணெய் பொருட் களை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி களின் கூட்டு அமைப்பு
மற்றும் லாரி உரிமையா ளர்களுக்கு நேற்று காவல் ஆணையர் அலுவல கத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவுப் படி போக்கு வரத்து கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங் தலை மையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் டேங்கர் லாரிக ளால் ஏற்படும் விபத்தை தடுக்கவும், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பாதுகாப் பாக செல்லவும், போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆலோ சனை வழங்கினார். அதன் விவரம்:
டேங்கர் லாரி வாகன ங்கள் கண்டிப் பாக தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டேங்கர் லாரிகள், நல்ல முறையில் பராமரிக்கப் படுகிறதா? என்பதை தினமும் ஆய்வு செய்வது அவசியம்.
டேங்கர் லாரி ஓட்டு நர்கள் தினமும் வாகன த்தை இயக்கு வதற்கு முன்பு வாகனத் தின் தன்மையை சரி பார்க்க வேண்டும்.
ஓட்டு நருடைய உரிமம் புதுப்பிக் கப்பட் டுள்ளதா? என்றும் அவருக்கு குற்றப் பின்னணி உள்ளதா? என்பதை யும் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் பார்த்து உறுதி செய்ய வேண்டும்.
எக்காரண த்தை கொண்டும் டேங்கர் லாரி கிளீனரை வாகனத்தை ஓட்ட அனுமதி க்கக் கூடாது. தினசரி அனுமதிக் கப்பட்ட முறை களைவிட அதிக முறைகள் வாகனத்தை இயக்கக் கூடாது.
ஓவ்வொரு டேங்கர் லாரி ஓட்டு நரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளா ர்களா? என்பதை அவ்வப்போது கண் காணிக்க வேண்டும்.
மது அருந்தி விட்டு வாகன ங்களை ஓட்டக் கூடாது என்பதை ஓட்டுநர் களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும். இது சம்பந்த மாக ஓட்டுநரின் நடவடிக் கைகளை வாகன உரிமை யாளர் கண் காணிக்க வேண்டும்.
டேங்கர் லாரிக ளை நிர்ணயிக் கப்பட்ட வேகத்தில் மட்டும் தான் இயக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 35 கி.மீ வேகத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 40 கி.மீ வேகத் துக்கு அதிக மாக வாக னத்தை இயக்கக் கூடாது.
பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிக ளில் மிகுந்த கவனத் துடன் மிதமான வேகத்தில் தான் வாகனத்தை இயக்க வேண்டும்.
அதிக ஓலியெழு ப்பியோ அல் லது இருசக்கர வாகன ஓட்டு நர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறு த்தும் வகையிலோ வாகன த்தை இயக்கக் கூடாது.
அனைத்து டேங்கர் லாரி வாகனங் களிலும் வேக கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் பக்கவாட்டு தடுப்பு தகடு கண்டிப்பாக பொருத்தியிருக்க வேண்டும்.
வாகன உரிமை யாளர்கள் மற்றும் கூட்டமை ப்பு நிர்வாகிகள், லாரி ஓட்டு நர்களுக்கு பாதுகாப் பான முறையில் வாகனத்தை இயக்க பயிற்சி வகுப்புகள் நடத்தி ஓட்டு நர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
லாரிகள் சென்னை மாநக ரில் ஏற்கெனவே குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க அனுமதிக் கப்பட் டுள்ளது. அதை கண்டிப் பாக கடைப் பிடிக்க வேண்டும்.
இந்த ஆலோசனை களை மீறுப வர்கள் மீது கடும் நடவடி க்கை எடுக்கப் படும் என காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் எச்சரித் துள்ளார்.