திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் கொலை யான வழக்கில், அரசு தரப்பில் நேற்று 10 பேர் சாட்சியம் அளித்தனர். திருப்பூர் கேவிஆர் நகரில்
உள்ள கதிரவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பில் படித்து வந்தவர் ஸ்ரீ சிவராம். இதே பள்ளியில் பயிலும் 6- ம் வகுப்பு மாணவர் ஒருவர், ஸ்ரீ சிவராமை கல்லால் அடித்த தால் உயிரிழந்த தாகக் கூறி,
கடந்த ஜனவரி மாதம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் சிறுவர் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி செல்லதுரை, 10 சாட்சியங் களிடம் நேற்று விசாரணை மேற் கொண்டார்.
அரசு தரப்பு சாட்சிகளான கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நாராயணன், பள்ளி ஆசிரி யர்கள் சுப்புலட்சுமி, சுந்தரி, பெரியகருப்பன், நிஷாந்தி, அண்ணா துரை, பள்ளிக் காவலர் ரங்கராஜ்,
வேன் ஓட்டுநர் செல்வராஜ், வேன் மேலாளர் வெங்கடாசலம் மற்றும் வெங்கடேசன் ஆகிய 10 பேரிடம் விசாரிக்கப் பட்டது.
இதை யடுத்து, வழக்கு விசார ணையை வரும் ஆக. 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அரசு உதவி குற்றத் துறை வழக்கறிஞர் கவிதா வழக்கில் ஆஜரானார்.