விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந் துள்ளனர். இவர்கள் அனை வரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் இருந்த வர்கள். பட்டாசு புகையில் மூச்சுத் திணறியே இவர்கள் உயிரிழந் ததாக மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கூறி யுள்ளார்.
சிவகாசி யில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மினிலாரி ஒன்றில் பட்டாசு பண்டில்கள் ஏற்றப் பட்டன. திடீரென உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் ஏற்பட்ட தீப்பிழம்பு அருகிலி ருந்த ஸ்கேன் சென்டரு க்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் அலறித் துடித்தனர். பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஸ்கேன் சென்டரின் பின்பக்க ஜன்னலை உடைத்து நோயா ளிகள் வெளி யேற்றப் பட்டனர். இதேபோல் கிடங்கிற்கு அருகே இருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ங்கள் மற்றும் லாரிகள் தீயில் எரிந்து சாம்ப லாகின.
தகவல் அறிந்து தீய ணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணை த்தனர். படுகாயம் அடைந்த வர்கள் சிவகாசி அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப் பட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர்.
காயம் அடைந்தவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. தற்போது இறந்தவர் களின் பெயர் தெரிய வந்துள்ளது. அவர்களில் வளர்மதி, பாஸ்கர், ராஜா, சொர்ண குமாரி, தேவி, பத்மாவதி, சுப்புலட்சுமி என தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த 9 பேரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் சிகிச்சை பெற வந்தவ ர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஸ்கேன் சென்டரில் 40க்கும் மேற்பட் டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்கள் அனைவ ரையும் ஜன்னல் கண்ணாடி களை உடைத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சம்பவம் நடந்த இடத் திற்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம், மாவட்ட எஸ்.பி ராஜராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற் கொண்டனர்.
விபத்து குறித்து செய்தியாள ர்களிடம் பேசிய ஆட்சியர் சிவஞானம், பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணை க்கு உத்தர விடப்பட் டுள்ளதாக கூறினார்.
புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக ஆட்சியர் சிவஞானம் கூறியு ள்ளார். பாதிக்க ப்பட்ட 20க்கும் மேற்ப ட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டுள்ளதா கவும் கூறினார்.