படங்களில் நடிப்பதை குறைத்தார் நடிகை அனுஷ்கா | Actress Anushka cut films !

அனுஷ்கா புதிய படங் களில் நடிப்பதை குறைத் துள்ளார். அவருக்கு விரை வில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
முன்னணி கதாநாயகி

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாய கியாக இருப்பவர் அனுஷ்கா. 2005–ல் சினிமாவில் அறிமுக மான இவருக்கு ‘அருந்ததி’ படம் பெரிய திருப்பு முனையை கொடுத்தது. 

இந்த படம் தமிழக த்திலும், ஆந்திரா விலும் வசூல் சாதனை படைத்தது. அதன் பிறகு மளமள வென படங்கள் குவிந்தன.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி என்று பெரிய கதாநாயக ர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தெலுங் கிலும் கை நிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். 

அனுஷ்கா பற்றி ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்தன. நடிகர் ஆர்யாவுடன் இணைத்து பேசப் பட்டார். தெலுங்கு நடிகர் பிரபாசை காதலிப் பதாகவும் தகவல் வெளி யானது. இதனை அவர்கள் மறுத்தனர்.

34 வயது

அனுஷ்கா வுக்கு தற்போது 34 வயது ஆகிறது. அவரை விட வயது குறைந்த நடிகை கள் பலர் திருமணம் செய்து குடும்பம் நடத்த போய் விட்டனர். எனவே அனுஷ்கா வுக்கும் 

விரைவில் திருமண த்தை முடித்து விட பெற்றோ ர்கள் தீவிரமாக மாப்பி ள்ளை பார்ப்பதாக கூறப் படுகிறது. ஐதராபா த்தில் தொழில் அதிபராக இருக்கும் ஒருவரை பேசி முடித்து இருப்பதா கவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சிங்கம் படத்தின் 3–ம் பாகமாக தயாராகும் எஸ்–3, மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய 4 படங்களில் அனுஷ்கா நடித்துக் கொண்டு இருக்கிறார். 

எஸ்–3 படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. பாகுபலி படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியா கிறது.

திருமணம்

பாகுபலி படம் திரைக்கு வந்ததும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்ப தாக கூறப்ப டுகிறது. இதற்காக புதிய படங்க ளில் நடிப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

சமந்தாவுக்கும், அனுஷ்கா வுக்கும் அடுத்த டுத்து திருமண ங்கள் நடக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings