சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது அபு சின் என்பவர் அமெரிக்க இளம் பெண் (21வயது) கிறிஸ்டீனா வுடன் காணொளி சேட் செய்தி ருந்தார்.
இவர்களின் உரையாடல் அடங்கிய காணொளி தொகுப்பு ஒன்று இணை யத்தில் வெளியாகி வைரலானது.
இச்சம் பவத்தை அடுத்து சவுதி காவற் துறையினர் நெறிமுறை யற்ற நடத்தை காரணமாக குறிப்பிட்ட வாலிபரை கைது செய்தனர்.
இவருக்கு ஆதரவாக சமூக வலைத் தளங்களில் கடும் கொந்த ளிப்பு ஏற்பட்டது. சவுதியில் இருந்து இயங்கும் சமூக வலைத்தள பிரபலங்கள் பலரும் இளைஞர் அபு சின்னுக்கு ஆதரவாக கருத்து க்களை வெளி யிட்டனர்.
இந்நிலை யில் ஒரு வார கால காவற்துறை காவலுக்கு பின்னர் அபு சின் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரியாத் காவற்துறை தலைமை அதிகாரியின் செய்தி தொடர்பாளர், இளைஞர் அபு சின் சவுதி அரேபியாவின் சைபர் குற்றவியல் சட்டப் பிரிவு 6- ஐ மீறியு ள்ளதாக தெரிவித் துள்ளார்.
வாலிபர் அபு சின் மீதான வழக்கு விசாரணை யில் உள்ளது. குறித்த வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப் பட்டால்
5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 30 லட்சம் சவுதி ரியால் செலுத்த வேண்டும் எனவும் கூறப்ப டுகிறது.
தற்போது விடுதலையா கியிருக்கும் அபு சின் வெளியிட்ட காணொளி ஒன்றில், தாம் தற்போது நிம்மதியை உணர்வ தாகவும், மேலும் இதுபோன்ற உரையா டல்களில் ஈடுபட மாட்டேன் எனவும் உறுதி அளித் துள்ளார்.