நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய பேத்திகள் நவ்யாவுக்கும் ஆராத்யாவுக்கும் நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். சமூகத்தில் நிலவும் பாலின வேறுபாடு குறித்தும்,
பெண்கள் நடத்தப் படும் விதம் குறித்தும் கூறியிரு க்கும் அமிதாப் தன் பேத்திகளை பெண்ணின த்துக்கு உதாரண மாக வாழ வேண்டும் என்று அக்கடித த்தில் குறிப்பிட் டுள்ளார்.
தன் இரு பேத்திகளு க்கு மட்டு மின்றி, இந்தக் கடிதம் எல்லா பேத்திக ளுக்கும் உரியது என்று அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதத்தைப் பகிர்ந் துள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்:
என் அன்புக்குரிய நவ்யா, ஆராத்யாவு க்கு...
நீங்கள் இருவரும் உங்களின் மென்மையான தோள்களில் நீண்ட பாரம்பரி யத்தின் மரபைச் சுமக்கிறீர்கள்.
ஆராத்யா, ஹரிவன்ஷ் ராய்பச்சன் (அமிதாப் பின் அப்பா) மரபையும், நவ்யா ஹச்.பி. நந்தா (அமிதாப் பின் மருமகன்) மரபையும் சுமக்கும் பெருமை அது.
உங்கள் இருவரின் தாத்தாக் களும் உங்களுக்கு அவர்களின் குடும்பப் பெயர்க ளோடு புகழ், கெளரவம் மற்றும் அங்கீகார த்தைக் கொடுத்திருக் கிறார்கள். நீங்கள் நந்தாவாக இருக்க லாம். பச்சனாக இருக்கலாம்.
ஆனால் நீங்கள் இருவரும் பெண்கள். நீங்கள் பெண்ணாக இருப்பதாலேயே, மக்கள் அவர்களின் சிந்தனையையும், எல்லையையும் உங்கள் மேல் திணிப்பார்கள்.
நீங்கள் எப்படி உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள்.
அவர்கள் கூறும் தீர்ப்பின் நிழலில் வாழாதீர்கள். உங்கள் சொந்த அறிவின் ஒளியில் உங்களுக்கான விருப்பங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் அணியும் ஸ்கர்ட்டின் நீளத்தை வைத்து உங்களின் குணத்தை மற்றவர்கள் நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள்.
உங்களின் நண்பர்களை அவர்கள் தேர்ந்தெடுக்க அனுமதிக்காதீர்கள். நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களின் திருமணம் குறித்து உங்களுக்குப் பிடித்தால் அன்றி மற்ற காரணங்களுக்காக ஒத்துக் கொள்ளாதீர்கள்.
மக்கள் ஏதாவது பேசுவார்கள். சில மோசமான விஷயங்களைப் பற்றிக் கூட கூறுவார்கள். அதற்காக அவற்றை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை.
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப் படாதீர்கள். அந்நாளின் முடிவில், உங்களின் செயல்களுக்காக விளைவுகளை நீங்கள் மட்டுமே சந்திக்கப் போகிறீர்கள்.
அதனால் மற்றவர்கள் உங்களின் செயல்களில் தலையிட அனுமதிக் காதீர்கள். நவ்யா - உனக்குக் கிடைத்திருக்கும் பெயரும், புகழும் நீ சந்திக்கப் போகிற கஷ்டங்களில் இருந்து ஒரு போதும் பாதுகாக்காது.
ஏனென்றால் நீ ஒரு பெண். ஆராத்யா - இதை நீ பார்த்துப் புரிந்து கொள்ளும் போது, உன் அருகில் நான் இல்லாமல் போகலாம். ஆனால் இன்று நான் சொல்வது உனக்கு நிச்சயம் பயன்படும்.
இந்த உலகம் ஒரு பெண்ணுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்ற பெண்களால் தான் அதை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.
உங்களின் சொந்த எல்லைகளை வகுப்பதும், உங்களின் சொந்த விருப்பங்களைத் தேர்வு செய்வதும், மக்களின் அறிவுரை களைத் தாண்டி எழுவதும் அத்தனை சுலபமில்லை.
ஆனால் நீங்கள்... உங்களால் எல்லோரு க்கும் ஓர் எடுத்துக் காட்டாய்த் திகழ முடியும்.
இதைச் செய்யுங்கள். நான் அடைந்த உயரைத்தைக் காட்டிலும் அதிகம் செல்லுங்கள். நான் அமிதாப்பச்சன் என்று அறிவதை விட, உங்களின் தாத்தா என்று அறியப்படவே ஆசைப்படுகிறேன்.
அதுவே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
என்றும் உங்கள் அன்புடன்,
தாத்தா, பாட்டி.