கோவில்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்குள் பெட்ரோல் குண்டு மற்றும் கத்தியுடன் சென்று வங்கியை பூட்டி, ஊழியர்களை மிரட்டிய தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி பிரதான சாலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் வங்கிக்குள் நுழைந்த ஒரு நபர்,
மேலாளர் சுசீந்திரா அறைக்குள் சென்று, அரசு நலத்திட்டங்கள் தொடர்பாக விசாரித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த கிளை மேலாளர், வங்கி தொடர்பான விஷ யங்களைத் தான் தங்களால் செய்ய முடியும் என கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் பையில் வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகள், லைட்டர் மற்றும் கத்தியை எடுத்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
பின்னர், தான் வைத்திருந்த பூட்டைக் கொண்டு வங்கியை உட்புற மாக பூட்டியுள்ளார். அச்ச மடைந்த கிளை மேலாளர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில், போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் வங்கிக்குச் சென்றனர்.
வங்கியின் கதவைத் திறக்குமாறு அந்த நபரிடம் கூறினர். ஆனால் கதவை திறக்க மறுத்து அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்.
பின்னர் ஒரு வழியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் உள்ளே சென்று, அந்த நபரைப் பிடித்தனர்.
அவர் வைத்தி ருந்த பாட்டில்கள் கீழே விழுந்த தில், காவல் ஆய்வாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போலீஸார் விசாரித்த போது அவர், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த அருணாசலம் மகன் மாரி யப்பசாமி (48) என்பது தெரியவந் தது. இவர், அலுமினியம் பட்டறை நடத்தி வந்தார்.
அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக கூலித் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், அவர் லேசான மனநலம் பாதிக்கப் பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவருக்கு மனைவி யும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்நோயாளியாக மாரியப்ப சாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
பெட்ரோல் குண்டு மற்றும் ஆயு தங்களுடன் வங்கிக்குள் சென்ற தற்கான காரணம் குறித்து போலீ ஸார் அவரிடம் கேட்ட போது, அரசு திட்டங்கள் ஏதும் தன்னைப் போன்ற ஏழைக ளுக்கு கிடைக்க வில்லை.
அதனால் தான் இது போன்ற செயலில் ஈடுபட்ட தாக கூறியுள் ளார். இச்சம்பவம் கோவில் பட்டியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.