விடுதி அறையில் இறந்த நிலையில் மாணவர் உடல் !

டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகத்தின் விடுதி அறையில் நேற்று மாலை இறந்த நிலை யில் மாணவர் ஒருவரின் உடல் கண்டெ டுக்கப்பட் டுள்ளது. 
விடுதி அறையில் இறந்த நிலையில் மாணவர் உடல் !
 நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற் கொண்டு வந்த ஜே.ஆர் பிலேமன் என்ற அந்த மாணவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களாக வெளி நடமாட்டம் இல்லா மல் இருந்த தாக கூறப்ப டுகிறது. 
இந்த நிலை யில், அவரது அறையில் இருந்து துர் நாற்றம் வீசியதால், அருகாமை யில் உள்ள அறையில் இருந்த மாண வர்கள் பாதுகாவ லருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து வந்த போலீசார் அறையை திறந்து பார்த்த போது, இறந்த நிலை யில் பிலேமன் உடல் கிடந்தது அதிர்ச் சியை ஏற்படு த்தியது. இந்த சம்பவத்து க்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின் றனர்.

டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர் நஜீப் அகமது, விடுதி அறையில் ஏற்பட்ட பிரச்சினை க்கு பிறகு கடந்த அக். 15 ஆம் தேதி திடீரென மாய மானார்.
இதையடுத்து மாயமான மாணவரை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வில்லை சக மாணவ ர்கள் போராட்ட த்தில் ஈடு பட்டனர். 
பல்கலை க்கழக துணை வேந்தர் உள்ளிட்ட நிர்வாகி களையும் அவர்கள் 12 மணி நேரம் சிறை பிடித்தனர். மாயமான மாணவரை சிறப்புக்குழு அமைத்து கண்டு பிடிக்க வேண்டும் ராஜ்நாத் சிங் உத்தர விட்டார். 

இந்த சம்பவ த்தால் பல்கலைக் கழகத்தில் ஒரு வித அசாதா ரண சூழல் நிலவிய நிலையில், தற்போது மாணவர் ஒருவரது உடல் கண்டெடு க்கப்பட் டுள்ளது பரபரப்பை அதிகரித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings