மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும். நம்மில் நிறைய பேருக்கு நெற்றியில் வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும்.
இதற்கு வயதாவது ஒரு காரணம். இது முதுமைக்கு முன்பு வருவது உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதை பொறுத்து வரலாம்.
மன அழுத்தம், மோசமான தோல் பராமரிப்பு, மது அருந்துதல், புகைப்பிடிப்பது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.
மெல்லிய கோடுகள் சருமத்தில் வயதாவதன் விளைவாக கொலாஜன் உற்பத்தி குறையும் போது தோல் தளர்வாகி சுருக்கங்கள் உருவாக தொடங்கும்.
அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும். மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும்.
பின்னர் அது அப்படியே நிலைத்திடும். நம் வீட்டிலேயே எளிய முறையில் இந்த சுருக்கத்தை போக்கி விடலாம்.
வாழைப்பழம் தேன் மற்றும் தயிர் இந்த மூன்றும் சேர்ந்த கலவை நெற்றியில் விழும் விடாப்படியான சுருக்கங்களையும் மறைக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. இவற்றைக் கொண்டு எப்படி நெற்றியின் சுருக்கங்களை போக்குவது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் . :
வாழைப்பழம் – 1
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன், தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
வாரம் 3-4 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.