பெங்களூரு வில், சகோதரரின் மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து கர்ப்பத்தை கலைத்த ஓட்டல் உரிமை யாளரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம்
பெங்களூரு அசோக் நகர் போலீஸ் எல்லை க்குட் பட்ட பகுதியில் வசித்து வருபவர் மாலா (வயது 21, பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி யில் படித்து வருகிறார்.
இவருடைய பெற்றோர் கடந்த 2006–ம் ஆண்டு இறந்து விட்டனர். இதனால், மாலா தனது தந்தை யின் சகோதர ரான ராஜூ என்பவரின் கண்காணி ப்பில் வளர்ந்து வந்தார். ராஜூ, ஓட்டல் நடத்தி வருகிறார்
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதாவது, மாலா மைனர் பெண்ணாக இருந் ததில் இருந்தே அவரை ராஜூ பாலியல் பலாத் காரம் செய்து வந்ததாக கூறப்படு கிறது.
மேலும், சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதா கவும் அவர், மாலாவை மிரட்டி யுள்ளார். இதனால் அவர் இது பற்றி வெளியில் யாரிடமும் கூற வில்லை.
இதனை ராஜூ தனக்கு சாதாகமாக பயன் படுத்திக் கொண்டார். இதற்கிடையே மாலா கர்ப்பம் அடைந்து ள்ளார். இதனை அறிந்த ராஜூ, மாலாவின் கர்ப்ப த்தை கலைத்து ள்ளார்.
கைது
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாலாவை மீண்டும் ராஜூ கற்பழித் ததாக கூறப்ப டுகிறது. தனது வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று மனம் உடைந்த மாலா,
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தோழியிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து, அவருடைய தோழி, மாலா படித்து வரும் கல்லூரி முதல்வ ரிடம் தெரிவி த்துள்ளார்.
அதனை தொடர்ந்து மாலாவின் சார்பில் கல்லூரி நிர்வாகம் அசோக் நகர் போலீசில் ராஜூ மீது புகார் அளித்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜூ வை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாலா அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப் பட்டுள்ளார்.
ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தனது சகோதர ரின் மகளை 10 ஆண்டுகளாக பலாத் காரம் செய்து கர்ப்பத்தை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.