ஒடிசாவில் பயணிகள் பஸ் ஒன்று பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற் குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 45-க்கும் மேற்பட்ட பயணி களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் துகுடா அருகே பாலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது எதிரே பைக் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த பைக் மீது மோதல் இருப்பதற் காக பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டு ள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து பஸ் பாலத்தை உடைத்துக் கொண்டு 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு ள்ளானது.
தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாப மாக உயிரி ழந்தனர்.
40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தி னருக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கள் தெரிவித்துள்ளார். இறந்தவர் களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அவர் உத்தரவி ட்டுள்ளார்