இளைஞர் கள் ஸ்டைலாக கூலர் கண்ணாடி அணிவதை பார்த்தி ருப்போம். வெறும் ஸ்டைலு க்காக மட்டும் கூலர் கண்ணா டிகள் அணிவ தில்லை.
அதற்கு ‘சன் கிளாஸ்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. எதற்காக சன் கிளாஸ் அணிய வேண்டும்? எப்படி தேர்வு செய்வது?
சன் கிளாஸ் எனப் படும் கூலர்ஸ் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர்கள் கண் களை தாக்காமல் இருப் பதற்கு தான் பயன்ப டுகிறது.
அல்ட்ரா வயலட் கதிர்களில் UVA, UVB, UVC என மூன்று வகை யுண்டு. இதில் பூமிக்கு வந்து நம்மை தாக்கக் கூடிய கதிர்கள் UVA, UVB இரண்டு மட்டும் தான்.
இக்கதிர் களின் தாக்கம் அதிகமா னால் கண்களின் ரெட்டினா வில் பாதிப்புகள் ஏற்படும். கண்ணில் மேல் புறமாக சதை வளரச் செய்யும்.
கேட்ராக்ட் என அழைக் கப்படும் கண்புரை நோய் வருவதற்கு முக்கிய காரணி யாக அமையும்.
விவசாயம், கட்டடக் கட்டு மானம் ஆகிய கடுமை யான வேலை களை நேரடி சூரிய ஒளியில் செய்பவர் களுக்கு கால போக்கில் கேட்ராக்ட் வருவதற்கு அல்ட்ரா வயலட் கதிர்கள் தான் காரணம்.
இது மாதிரியான பாதிப்பு களைத் தடுப்ப தற்கும், பயணங் களின் போது கண் களில் தூசு, பூச்சிகள் தாக் காமல் இருப்ப தற்கும் சன் கிளாஸ் அணிகி றார்கள்.
சன் கிளாஸில் UVR 400 என்று அச்சிட்டிரு ப்பார்கள். இதன் அர்த்தம் இவ்வகை கிளாஸ்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை 400 நேனோ மீட்டர் முன்பா கவே தடுத்து நிறுத்தி விடும் என்ப தாகும்.
தரமான நிறுவனங் களின் மூலம் தயாராகும் கண்ணாடி களில் மட்டும் தான் ‘யூவி புரொட க்சன் லேயர்’ சரியாக பூசப்பட் டிருக்கும்.
மலிவு விலையில் விற்கப் படும் கண்ணா டிகளில் இந்த லேயர் இருக்காது. வெறுமனே UVR-400 என போட்டிருப் பார்கள். இதை அணிவ தால் எந்த பயனும் இருக்காது.
மேலும் இத்தகைய மலிவு விலையில் கிடைக்கும் கண்ணாடி களை தொடர்ந்து அணிபவர் களுக்கு கண் வீக்கம், எரிச்சல், கண்களில் நீர் வழிதல் ஆகிய பிரச்னை கள் ஏற்படும்.
தரமற்ற உலோகம், மட்டரக பிளாஸ்டிக், போலி யான சாயங்கள் கொண்டு இத்தகைய கண்ணாடி கள் தயாரா வதால் ’கான்டாக்ட் டெர்மடைடிஸ்’ போன்ற சரும நோய் ஏற்பட வாய்ப்பு ண்டு.
கண்களைச் சுற்றியுள்ள பகுதிக ளில் தோல் சிலருக்கு சிவப்பாக கூட மாறும். ஒரு சிலருக்கு கரு வளையங் களை உருவாக்கி விடும்.
தரமான நிறுவன ங்களில் தயாராகி தகுந்த உத்திரவாத த்துடன் விற்பனை க்கு வரும் சன் கிளாஸ் களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
கண்களின் பாதுகாப் புக்கு அணியும் சன் கிளாஸ் களை வெறும் ஸ்டைலு க்காக மட்டுமே பயன் படுத்தக் கூடாது. தரமான ஸ்வான் கிளாஸ்கள் ரூபாய் 500 முதல் கிடைக் கிறது.
ரூபாய் 1,000-க்கு நல்ல தரமான கூலர்ஸ் கிடைக்கும். போலி சன் கிளாஸ்களை அணிந்து ஆரோக்கியமாக இருக்கும் கண்களை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
ஸ்டைலுக்காக பயன்படுத்த ஆரம்பித்து வீணாக கண் பிரச்னையை வரவைத்து விடக்கூடாது.