முதல்வர் ஜெயலலிதா உடல் நலமடைந்து வீடு திரும்பினாலும் அரசுப் பணி களை கவனிக்க துணை முதல்வரை நியமிக்கப் போவதாக தகவல் வெளியாகி யுள்ளன.
ஜெயலலிதா வீட்டில் இருந்த படியே அட்வைஸ் கொடுப்பார். துணை முதல் வர் அதைச் செய்து முடிப்பார். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடப்பதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக் கின்றன.
டந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. இன்றோடு 14 நாட்கள் கடந்து விட்டது.
முதல்வரின் உடல் நிலை குறித்து பல்வேறு அறிக்கைகள் வந்தாலும் எல்லா அறிக்கையி லும் முதல்வர் இன்னும் சில தினங்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்றே கூறப் படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா எப்போது டிஸ்சார்ஜ் செய்யப் படுவார்? எப்பொழுது வழக்கமான பணிகளை தொடர்வார் என்பது பற்றி உறுதியான தகவல் வெளி யாக வில்லை.
ஜெயலலிதா மருத்துவ மனையில் இருப்பதால் அவர் குணமாகி வரும் வரை அரசு பணிகள் தொய்வின்றி நடைபெற துணை முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
டிராபிக் ராமசாமி
முதல்வர் ஜெயலலிதா வின் உடல் நிலை குறித்து உண்மை யான அறிக்கை வெளியிட கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் உள்ளதால்,
அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பி ட்டுள்ளார்.
விஜயகாந்த் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் நிரந்தர கவர்னர் இல்லாத நிலையிலும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, செயல்படாத முதல்வரை கொண்ட தாகவும் உள்ளது.
தமிழகத் தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி உரிய முடிவுகளை எடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.
எனவே முதல்வரின் உடல் நிலை முழுவதும் சீராகும் வரை அந்த பொறுப்புக்கு வேறு ஒரு நபரை இந்த அரசு தேர்ந்தெடுக்க வேண்டும்.
மருத்துவ மனையில் நடக்கும் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட் டுள்ளார்.
ஓய்வு அவசியம்
முதல்வர் ஜெயலலிதா உடல் நலமடைந்து வீடு திரும்பி னாலும் அரசுப் பணிகளை கவனிக்க துணை முதல்வரை நியமிக்கப் போவதாக தகவல் வெளியாகி யுள்ளது.
ஜெயலலிதா வீட்டில் இருந்த படியே ஆலோசனை கூறுவார் என்றும், துணை முதல்வர் அதைச் செய்து முடிப்பார். அதற்கான வேலைகளும் ஒருபக்கம் நடப்பதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக் கின்றன.
துணை முதல்வர் நியமனம்
முதல்வர் ஜெயலலிதா குணமாகி வரும் வரை துணை முதல்வர் பதவியை வகிக்கப் போவது யார் என்ற பேச்சும் அதிமுக வட்டாரத் தில் எழுந்து வருகிறதாம்.
அனேகமாக முன்னாள் முதல்வரும் நிதியமைச் சருமான ஓ.பன்னீர் செல்வம் அல்லது பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
ஆகியோரில் ஒருவர் துணை முதல்வராக வாய்ப் புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப் படுகிறது. இதில் எடப்பாடி பழனிச் சாமிக்கே வாய்ப்பு அதிகம் என்று சொல்கி றார்கள்.