இந்தியா நியூசிலாந்து நடுவேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடை பெறும் நிலையில், நியூசிலாந்து வீரர்களை தனது கார் ஓட்டும் சாமர்த்திய த்தால் மிரட்டியுள்ளார் இந்திய கேப்டன் டோணி.
இந்தியாவு க்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்ட த்தில் 6 விக்கெட் வித்தியா சத்திலும், மொகாலியில் நடந்த 3வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியா சத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
டெல்லியில் நடந்த 2வது போட்டி யில் நியூசிலாந்து அணியிடம், இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தது. 3வது போட்டி நடைபெற்ற, மொகாலி யிலிருந்து இரு நாட்டு அணிகளும் விமானத்தில் ராஞ்சி வந்தது.
விமான நிலையத்தில் இருந்து இரு நாட்டு வீரர்களும் சொகுசு பஸ்களில் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். ஆனால், டோணி மட்டும் இந்திய அணி வீரர்களுடன் பஸ்சில் பயணிக்க வில்லை.
விமான நிலையத்தில் தயாராக கொண்டு வரப்பட்டிருந்த டோணியின் விலை மதிப்புள்ள ஹம்மர் வகை காரில் ஏறி ஹோட்டலுக்கு கிளம்பினார்.
அந்த காரை அவரே ஓட்டிய தோடு, நியூசிலாந்து வீரர்கள் பயணித்த பஸ்சை ஓவர் டேக் செய்து 'சீன் போட்டார்' டோணி. நியூசிலாந்து வீரர்கள் வாயை பிளந்தபடி "வாவ்..." என்றனர். அந்த புகைப்படம் தற்போது வெளியா கியுள்ளது.
டோணி ஒரு ரேஸ் பிரியர். அவரிடம் விலை உயர்ந்த 27 வகை மோட்டார் சைக்கிள் களும் பல்வேறு வகையான கார்களும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. நீங்களும் வீடியோவை பார்த்து டோணி ஸ்டைலை ரசிக்கலாம்.