சவுதி அரேபியாவில் திருமணம் முடிந்து இரண்டு மணி நேரத்தில் உறவை முறித்துக் கொள்வதற்கு மணமகன் விவாகரத்து கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியின் ஜெட்டா பகுதியில் நடைபெற்ற இந்த திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இந்த திருமண த்திற்கு முன்பு மணமகன் பெண் வீட்டாரு க்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்திரு ந்துள்ளார்.
அதன் படி திருமண நிகழ்ச்சிகள் பற்றிய புகைப் படங்களோ , வீடியோ காட்சி களோ சமூக வலைத் தளங்களில் மணமக ளால் பதிவேற்றம் செய்ய கூடாது என்பதாகும்.
மேலும் திருமணத் திற்கு பிறகும் தமது மனைவி சமூக வலைத் தளங்களை பயன் படுத்த கூடாது என்வும் அதில் தமக்கு விருப்பம் இல்லை என்பதால்,
இந்த நிபந்த னைக்கு கட்டுபட வேண்டும் என்று மணப்பெண் ணின் வீட்டா ரோடும் அவர் தெரிவித் திருந்தார்.
ஆனால், திருமண நிகழ்ச்சி கள் முடிந்த நிலையில் மணமகள் தமது நண்பர்க ளுக்கு ஸ்னாப்சேட் வழியாக திருமண புகைப் படத்தை பகிர்ந்து ள்ளதாக கூறப்ப டுகிறது.
இந்த விஷயம் தெரிய வந்ததால் மணமகன் உடனடி யாக விவாக ரத்து கோரியு ள்ளார்.
தமது நிபந்த னைக்கு கட்டுப் படாத பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் பெண்ணின் உறவினர் களிடம் தெரிவித் துள்ளார்.
இதே போன்ற ஒரு சம்பவம், இந்த ஆண்டு துவக்கத் தில் நடை பெற்றது.
அதில் சவுதி மணமகன் ஒருவர் மணமகள் தமது திருமண நிகழ்ச்சிகள் பற்றி தமது தோழிகளுடன் வாட்ஸ் அப்பில் சேட் செய்து கொண்டிருந்ததாக, அதே நாளில் விவாகரத்து கோரிய சம்பவமும் நடை பெற்றது.