சிங்கப்பூரில் முதல் முறையாக தீபாவளி பற்றி அழகிய வண்ண தீம்களுடன் கூடிய ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் உற்சாகமாக கொண்டாடப் படுகிறது.
இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூர் போக்குவரத்து கழகம், (Mass Rapid Transit) தீபாவளியை குறிக்கும் வகையிலான வண்ண தீம்களுடன் ரயிலை அறிமுகம் செய்து ள்ளது..
தீபாவளி யை குறிக்கும் வண்ணம் ரயிலின் கூரை, தரைபகுதி முழுவதும் வண்ண வண்ண கோலங்கள், தாமரைப் பூக்கள், நகைகள் தீம்களாக இடம் பெற்று ள்ளன.
இந்த ரயிலை சிங்கப்பூர் போக்கு வரத்து அமைச்சர் கௌவ் பூன் வான் சமீபத் தில் தொடங்கி வைத்தார்.