இறைச்சியை அரைவேக்காடாக சாப்பிடாதீர்கள் !

2 minute read
டெல்லியில் பரவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்ட வற்றை அரைவேக் காடாக உட்கொள்ள வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத் தியுள்ளது. 
இறைச்சியை அரைவேக்காடாக சாப்பிடாதீர்கள் !
அண்மை யில், டெல்லி வன உயிரியல் பூங்கா விலும் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. அவற்றின் உடல் களை பரிசோதனை செய்த மருத்து வர்கள்,
பறவை காய்ச்ச லால் அவை உயிரிழந் ததை உறுதிப் படுத்தி உள்ளனர். 

இதே போல், மான் பூங்கா விலும் பறவை காய்ச்சல் பரவி, அங்கும் பறவைகள் பலியாயின. இதனால் உயிரியல் பூங்கா, மான் பூங்கா ஆகியவை மூடப்ப ட்டுள்ளன. 

டெல்லியில் பறவை காய்ச்சலு க்கு இது வரை 58 பறவைகள் பலியாகி யுள்ன. 

அதே போல், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் உயிரியல் பூங்காவில் பரமாரிக் கப்பட்டு வந்த 18 பறவைகள் கடந்த சில தினங் களுக்கு முன்பு உயிரி ழந்தன. 

இதையடுத்து அந்த பூங்காவும் தற்காலிக மாக மூடப் பட்டது. இதனி டையே, டெல்லி பூங்கா, ஹாஸ் காஸ் பகுதியில் உள்ள மான் பூங்கா மற்றும் வேறு சில இடங்க ளில் மொத்தம் 8 பறவைகள் உயிரிழ ந்தன. 
இவற்றின் மாதிரி களும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. இந்த நிலையில், டெல்லி யில் மக்களிடம் பறவை காய்ச்சல் பீதி அதிகரித் துள்ளது. 

டெல்லி மாநில அரசு முன்னெச் சரிக்கை நடவடிக் கையாக சில அறிவிப்பு களை வெளியிட்டி ருக்கிறது. அதில், ''ஆப்பாயில், அரைவே க்காடு இறைச்சி சாப்பிடா தீர்கள்.

இறைச் சியை நறுக்கும் போது முகமூடி அணிந்து கொள்ளு ங்கள். இறந்து கிடக்கும் பறவை களுக்கு அருகே செல்லா தீர்கள்'' என பல அறிவு ரைகள் கூறப்பட் டுள்ளன. 
மேலும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங் களிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. 

அதனை தடுக்க மாநில அரசுகளும், வன விலங் குகள் சரணால யங்களும் முன்னெச் சரிக்கை நடவடி க்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத் தியுள்ளது.
Tags:
Today | 3, April 2025
Privacy and cookie settings