1994-ம் ஆண்டு ஜூன் மாதம், சின்னாம்பதி மக்களுக்கு மறக்க முடியாத மாதம். அப்போது, சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டி ருந்த சிறப்பு அதிரடிப் படையினர், இங்குள்ள மலைவாழ் பெண்கள்
இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 5 இளைஞ ர்களை சித்ரவதை செய்த தாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, நீதிபதி பானுமதி தலை மையில் விசாரணைக் குழு அமைத்தது அரசு. பாதிக்கப் பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும்,
இந்த மலைக் கிராமத் துக்குத் தேவையான அனைத்து வசதிக ளையும் செய்து தருமாறும் அக்குழு பரிந்துரை செய்தது. அந்த மலைக் கிராமம் இப்போது எப்படி இருக்கிறது?
கோவை பாலக்காடு சாலையில், சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கேரள எல்லையான வாளையாறுக்கு அரை கிலோ மீட்டர் தூரம் முன்பு,
வலது பக்கம் செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவு பயணித் தால் வருகிறது சின்னாம்பதி கிராமம்.
அதற்கு முன்பு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுப்பதி கிராமத்துக்கு 22 ஆண்டுக ளுக்கு முன்பே பேருந்து இருந்தது.
அங்கிருந்து 2 சிற்றோடை களைக் கடந்து, விலங்குகள் சூழ்ந்த வனத்தைக் கடந்து, கால்நடை யாகத் தான் சின்னாம் பதியை அடையும் நிலை இருந்தது.
தார் சாலையும்…பாலங்களும்…
இப்போது, சின்னாம்பதி வரை தார் சாலை போடப் பட்டுள்ளது. ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. காலை 6.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பேருந்து இயக்கப் படுகிறது.
ஊருக்கு அரை கிலோ மீட்டர் தொலை விலேயே பழங்குடி யினருக்கான உண்டு-உறைவிடப் பள்ளி கட்டப்பட் டுள்ளது.
அதிரடிப் படை புகுந்த காலத்தில் தென்னை மட்டை, பனை மட்டை களால் வேயப் பட்ட 40 ஓலைக் குடிசைகள் தான் இருந்தன.
தற்போது, அவை கான்கிரீட் வீடுகளாக மாறி யுள்ளன. எனினும், 46 வீடுகளின் கூரைகள் பெயர்ந் து, மழை வந்தால் ஒழுகும் நிலை உள்ளது.
“இப்போது 46 வீடுகள் தான் உள்ளன. பலருக்கும் திருமணமாகி, 76 குடும்பங்கள் இவற்றில் வசிக்கின்றன.
எனவே, கூடுதல் வீடுகள் கட்டித்தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து ள்ளோம்” என்று இக்கிராம மக்கள் தெரிவிக் கின்றனர்.
யானையால் தொந்தரவு…
ஆழ்குழாய்க் கிணறு மூலம் தண்ணீர் நிரப்ப மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.
காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து, குடிநீர்க் குழாய் களை உடைத்து, தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கி ன்றன. இதனால், பல நாட்கள் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்துக் குள்ளாகி ன்றனர்.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், மலை உச்சியில் உள்ள பொன்னூத் திலிருந்து பிவிசி குழாய் பதித்து, தண்ணீரைக் கொண்டு வருகின்றனர்.
அந்தக் குழாய் களையும் யானைகள் மிதித்து உடைத்து விடுவதால், அங்கேயே குடத்தை எடுத்துக் கொண்டு போய் தண்ணீர் எடுக்க வேண்டி யுள்ளது என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.
உஷாராயிட்டோம்…
“22 ஆண்டுகளில் நீங்கள் என்ன முன்னேற்றம் அடைந்தி ருக்கிறீர்கள்?” என்று அங்குள்ள பெண்களிடம் கேட்ட போது, “அப்பவெ ல்லாம் யார் வேணும்னா வந்து, எங்களை ஏமாத்திட்டு போயிட முடியும்.
குற்றம் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. இப்பவெ ல்லாம் அப்படி யில்லை. தப்பு எதுன்னு சட்டுனு தெரிஞ்சுடுது. உடனே போலீஸ் ஸ்டேஷன், அதிகாரி கள்ன்னு போயிடு வோம்ல?” என்றார்கள்.
இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், மலை உச்சியில் உள்ள பொன்னூத் திலிருந்து பிவிசி குழாய் பதித்து, தண்ணீரைக் கொண்டு வருகி ன்றனர்.
அந்தக் குழாய்க ளையும் யானைகள் மிதித்து உடைத்து விடுவதால், அங்கேயே குடத்தை எடுத்துக் கொண்டு போய் தண்ணீர் எடுக்க வேண்டி யுள்ளது என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.
அதிரடிப் படை, பாலியல் கொடுமை, இளைஞர்கள் சித்ரவதை என்ற பழங்கதை யைக் கேட்டால், அனைவருமே மவுனமாகி விடுகி றார்கள்.
“தயவு செய்து அதைப் பற்றிக் கேட்கா தீர்கள். அதை நினைத்தாலே, தற்கொலை செய்து கொள்ள வேண்டு மென்று தோன்றுகிறது” என்று குமுறு கிறார்கள்.
தொழில் தொடங்க உதவி தேவை…
அதே ஊரைச் சேர்ந்த குமார் கூறும்போது, “1994 சம்பவ த்துக்குப் பிறகு, வேஸ்ட் பனியன், தறியைப் பயன்படுத்தி கால் மிதியடி செய்ய கற்றுக் கொடுத்தார்கள்.
ஆனால், அந்த இயந்திரங்கள் பழுதான பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தொழிலை விட்டு விட்டோம்.
விவசாய நிலங்கள் வைத்திரு ந்தவர்கள், அவற்றை வெளியூர்கார ர்களுக்கு விற்று விட்டனர்.
அதனால், நாங்கள் கூலி வேலைக் குத்தான் செல்கிறோம். அதுவும் நிரந்தரம் கிடையாது. விவசாய வேலையோ, நகரில் கட்டிட வேலையோ, எதுவா னாலும் தினமும் ரூ.200-க்கு மேல் கூலி கிடைப் பதில்லை.
அதுவும், ஓராண்டில் பாதி நாட்கள் தான் கிடைக் கிறது. சிலர் ஆடு, மாடு மேய்ச்ச லில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் ஏதாவது தொழிற் சாலை அமைத் தால், நாங்கள் வாழ வழி ஏற்படும். இல்லை, ஆதிவாசி களான எங்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் கொடுத்தால், அதில் விவசாயம் செய்து, பிழைத்துக் கொள்வோம்” என்றார்.
இந்த ஊரில் 253 பேர் வசிக்கி ன்றனர். குடியி ருப்புக்கு நடுவில் இருக்கும் சமுதாயக் கூடத்தில் செயல்படும் சத்துணவுக் கூடத்தில் 12 குழந்தைகள் உள்ளனர்.
இக்கிரா மத்தில் 2 பெண்கள், 2 ஆண்கள் பிளஸ் 2 படித்து ள்ளனர். அருகில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் 20 பேர் படிக்கி ன்றனர். அதில் 2 பேர் பிளஸ் 2 மாணவர்கள்.
இங்கு பட்ட தாரிகள் யாரும் இல்லை. ரேஷன் பொருட்களை வாங்க 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுப்பதி கிராமத்து க்குச் செல்ல வேண்டியுள்ளது.
சோலார் மின் சக்தி, மின் வாரியம் வழங்கும் மின்சாரம் இரண்டுமே உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. அவ்வப் போது செவிலியர் வந்து செல்கிறார்.
அதிரடிப்படை யால் பிரச்சினை ஏற்பட்டபோது, இவர்களுக்காகப் போராடிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை பிரதிநிதி அய்யாசாமி கூறும் போது,
“அந்த சம்பவம் நடந்த பின்னர், நீதிபதி பானுமதி 2 நாட்கள் இந்த கிராமத்தி லேயே தங்கி, விசாரணை நடத்தினார்.
மக்கள் முன்னேற்ற த்துக்காக தொழில் உதவிசெய்தல், பள்ளி, சுகாதார மையம், சாலை, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு பரிந்து ரைகளை அரசுக்கு வழங்கினார்.
அவற்றை முழுமையாக நிறைவேற் றினாலே, மக்கள் முன்னேறி விடுவர்” என்றார்.