தனது மகள் போட்டிருந்த செல்பி படங்களைப் பார்த்த அவரது தந்தை அவரைப் போலவே தானும் போஸ் கொடுத்து போட்டுள்ள செல்பி யால் சமூக வலைத ளங்களில் பரபரப்பா கியுள்ளது.
தந்தையும், மகளும் போட்டிருந்த செல்பி படங்கள் தற்போது வைரல் ஆகி யுள்ளன. அந்தத் தந்தையின் பெயர் கிறிஸ் மார்ட்டின். இவரது 19 வயது மகள் காஸி மார்ட்டின்.
இவர் சற்றே செக்ஸியாக செல்பி படங்களை எடுத்துப் போட்டி ருந்தார். இதைப் பார்த்த அவரது தந்தை கிறிஸ் மார்ட்டின் எடுத்தார் செல்போனை, தனது மகளைப் போலவே போஸ் கொடுத்து அவரும் எடுத்தார் செல்பி களை.
இந்த செல்பி களை அவரும் சமூக வலை தளத்தில் போட்டார். இவர்கள் இருவரின் செல்பி களும் தற்போது வைரல் ஆகியுள்ளன.
தனது மகள் எப்படி யெல்லாம் போஸ் கொடுத்தாரோ அதே போல இவரும் போஸ் கொடுத்து அசத்தி யுள்ளது தான் சுவாரஸ் யமானது.
இது குறித்து காஸி கூறுகை யில், எனது தோழிகள் சிலர் இதைப் பார்த்து என்னிடம் சொன்னா ர்கள். அவர்களுக்கு இந்தப் படம் பிடித் துள்ளது என்றார் சிரித்தபடி.
மேலும் அவர் கூறுகையில் எனது அப்பா ஒரு காமெடி யான தந்தை என்றும் புன்னகை த்தார். சரி உங்க படத்தைப் பார்த்து மகள் அடக்கமாக மாறுவார் என்று நம்புகிறீர்களா என்று மார்ட்டி னிடம் கேட்டால், நிச்சயம் மாற மாட்டார்.
இன்னும் ஒரு படி மேலே போனாலும் போவார். அதுதான் எனக்குக் கவலை யாக இருக்கிறது என்று கூறிச் சிரிக்கிறார். பேசாம தமிழ் நாட்டுக்கு வந்து ஒரு மாசம் தங்கிட்டுப் போங்க ளேன்.