டீ குடிக்கும் நேரம் டீ கடையில் ப்ரீ வைபை !

ஜியோ சிம் கார்ட் வருகை தந்து பெரும் பாலானவர்களின் டேட்டா பஞ்சத்தை போக்கி யுள்ளது. ஆல்டைம் ஆன்லைனில் நிறைய பேரினை பார்க்க முடிகிறது.
டீ குடிக்கும் நேரம் டீ கடையில் ப்ரீ வைபை !
நெட் ஆஃப் பண்ண மறந்துட்டானே என புலம்பும் ஆட்கள் எல்லாம் நெட்டை ஆஃப் செய்வதை மறந்தாலும் பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ள வில்லை. இப்படியான ஒரு சூழலை ஜியோ சிம் உருவாக்கி இருக்கும் நிலையில் 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிக்கும் நேரம் ஃப்ரீ wi-fi பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி வாடிக்கையா ளர்களை ஈர்த்து வருகிறார் சயித் காதர் பாஷா.

பெரிய காபி ஷாப் எல்லாம் இல்லை, சாதாரண டீக்கடை. தற்போதைய காலத்தில் எப்படி விளம்பரம் செய்தால் மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதை அறிந்து கொண்ட பாஷா சிறந்த முறையை கையில் எடுத்துள்ளார். 

அவர் கடையில் ஒரு கப் டீ விலை ரூபாய் ஐந்து. கர்நாடகா வில் இருக்கும் பல்லேரி என்ற மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில் இருக்கும் மாண வர்கள், 
பொது மக்கள் என தினமும் 100 கப் டீ விற்றுக் கொண்டிருந்தவர், தற்போது இப்புதிய திட்டத்தின் வெற்றியால் தினமும் 400 கப் விற்று தீர்த்து வருகிறார்.

கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள், டீ வாங்கிக் கொண்டு பாஸ்வேர்ட் பெற்றுக் கொள்ளலாம். இதனால், வியாபாரத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்று விட்டார். 

இதன் மூலம் கிராமங்களிலும் இண்டர்நெட் வசதிகள் பெற முடியும் என்ற நோக்கிலும் செய்து வருகிறார்.
Tags:
Privacy and cookie settings