வீட்டில் பெண் குழந்தைகள் விளக்கேற்றினால்?

நம் வீட்டிலுள்ள பெண் குழந்தை களை அவர்க ளது தாய் மார்கள் தினமும் விளக்கு ஏற்றும் படி பணிக்க வேண்டும். இதில் அவர் களின் இறை பணி மட்டு மில்லாமல் அவர்க ளின் தேஜசும் (அதாவது முகபொ லிவும்) கூடுகிறது.

இதை சோதிக்க விரும் பினால், தாய் மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப் பிட்ட தினத்தி லிருந்து விளக்கு ஏற்றும்படி சொல் லுங்கள். 

அன்று தங்கள் பெண்ணி டம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணா டியில் பார்க்க சொல் லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணா டியின் மூலையில் குறித்து வை யுங்கள்.

சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற் கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளா தீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணா டியில் அவளது முகபொலி வினை பார்க்க சொல் லுங்கள். நீங்களும் பாருங்கள்.

மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சய மாக ஒரு மாற் றத்தை உங்களால், உங்கள் பெண் ணால் உணர முடியும். அது மட்டுமின்றி பெற்றோர் களின் ஆதரவும் அரவணை ப்பும் வியப் பூட்டும் வகையில் கூடும்.

விளக்கேற்ற வேண்டிய நேரம்

விடியற் காலையில் சூரியன் உதயமா வதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடி யலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழி பட்டால் எல்லாவித யோகத் தையும் பெறலாம்.

அதேபோல் மாலை யில் சூரியன் மறை வதற்குச் சற்று முன்ன தாக, பிரதோஷ காலம் என்கிற உன்னத மான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழி பட்டால், குடும்பத் தில் செல்வம் பெருகும். 

சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோ ருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண் டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லா விதமான யோக பாக்கிய ங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்

1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிரு ந்தாலும் அத்த னையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிக ளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்து விளக்கை ஏற்றி விட்டு வணங் கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகிய வற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறை யாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்று வதோடு, 

வீட்டில் உள்ளோர் அனை வரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனை யைத் தூண்டி, சிறந்த முறை யில் செயாலா ற்ற வைத்து, நிலை யான அமைதி யைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன் களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக் கவும். வாயினால் ஊதக் கூடாது. கல் கண்டை கொண்டு தீபத்தை அமர்த்த வேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வி ன் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்று வோம். தீபமேற்றி என்றும் இறை வெளிச்சத் தில் இன்பம் காண்போம்.

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோ ஷமும் இல்லத்தில் நிறைந் திருக்கும்.

நல்லெ ண்ணை எனப்படும் எள் எண் ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடை களும் தொ லைந்து போகும். விளக்கெ ண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவ ர்களுக்கு புகழ் அபிவிருத் தியாகும்.

வேப்ப எண் ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

நெய், விளக்கெ ண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங் கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷ ங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யி னால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன் மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர் கள் தங்கள் குல தெய்வ த்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

எள் எண்ணெய் (நல்லெ ண்ணை) தீபம் என்றுமே ஆண்ட வனுக்கு உகந்தது. நவக்கிர கங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டு வோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திரசித்தி பெற வேண் டுவோர் விளக் கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெ ண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய் களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்த தாகும். முருகனு க்கு நெய் தீபம் உபயோகப் படுத்துவது நல்லது. நாராயண னுக்கு நல்லெண் ணெய் ஏற்றதாகும். மகாலட்சு மிக்கு நெய் உபயோகப் படுத்தலாம். 

சர்வ தேவதை களுக்கு நல்லெண் ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண் ணெய் இவை மூன்றும் உபயோகி க்கலாம்.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.
Tags:
Privacy and cookie settings