பெயர் கிருஷ்ண வேணி.. வயது 34. இவர் கடந்த 2 நாட்களாக கேரள தலைமைச் செயலகப் பகுதியை அலற வைத்து வருகிறார். காரணம் இவர் மேற்கொண்டுள்ள நூதனப் போராட்டம்.
அரசு ஊழியர்கள் தன்னிடம் லஞ்ச மாக தனது கற்பைக் கேட்பதா கவும, முத்தம் கேட்பதாகவும், தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்து வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கிருஷ்ண வேணி.
தன்னால் அதைத் தர முடியாது என்பதால் பொது மக்கள் தனக்கு பிச்சை போட்டு லஞ்சப் பணத்தைக் கட்ட உதவ வேண்டும்
என்ற வாசகம் அடங்கிய பேனரை நிறுவி போராட்டத்தில் குதித்துள்ளார் கிருஷ்ணவேணி.
திருவனந்த புரத்தையும், கேரள அரசு ஊழியர்கள் மத்தியிலும் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது அரசியல் உள்நோக் கத்துடன் கூடிய போராட்டம் என்று கேரள காவல்துறை கூறி யுள்ளது.
எனக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன், ஒரு உண்டி யலையும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார் கிருஷ்ண வேணி.
அவருக்குப் பலர் பணம் கொடுத்துச் செல்கின்றனர் என்று தி நியூஸ் மினிட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. கிருஷ்ண வேணி, சிறையின் கீழு கிராமத் தைச் சேர்ந்தவர்.
அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், அதைக் கொடுக்க முடியாததால் தனது கற்பைக் கேட்பதாகவும் குற்றம் சாட்டி யுள்ளார் கிருஷ்ண வேணி.
இது குறித்து அவர் கூறுகையில், எனது நிலம் தொடர்பான ஆவண ங்களை அங்குள்ள அதிகாரிகள் திரித்து மோசடி செய்துள்ளனர்.
வேறு ஒருவரின் நிலத்தை நான் ஆக்கிரமித்துள்ளது போல மாற்றி யுள்ளனர். பிரச்சினையைத் தீர்க்க என்னிடம் பணம் கேட்டனர்.
ஆனால் நான் தர முடியாது என்று கூறியதால் அப்படியானால் உன் கற்பைக் கொடு என்று கேட்டு மிரட்டினர். அங்குள்ள இரண்டு அதிகாரிகள் தான் என்னிடம் இப்படி நடந்து கொண்டனர்.
ஒருவர் என்னிடம் முத்தம் கேட்டார். இன்னொருவர் தனிமையில் என்னுடன் எனது வீட்டில் உல்லாச மாக இருக்க வேண்டும் என்று கேட்டார் என்று கூறுகிறார் கிருஷ்ண வேணி.
அவர் டிஎஸ்பி அஜி என்பவர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதை அஜி மறுத்துள்ளார்.
இது குறித்து அஜி கூறுகையில், இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய புகார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
விசாறணை முறையாக நடந்து வருகிறது. இது முடிந்து போன விவகாரம். இந்த வழக்கில் தற்போது மேலும் சிலரை சேர்க்க வேண்டும் என்பதற் காக இவ்வாறு நடந்து கொள்கிறார் கிருஷ்ண வேணி என்றார் அஜி.