இனி ஜி.எஸ்.டி மூலமாக செலுத்தலாம் | Will no longer be paid for by the GST !

சரக்கு மற்றும் சேவை வரி அமலு க்கு வந்த பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமா கவே வரி செலுத்தலாம் என்று வருவாய் செயலாளர் தெரிவித் துள்ளார். 
இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியி லிருந்து அமல்படுத் துவதாக மத்திய அரசு அறிவித் துள்ளது. 

ஜி.எஸ்.டி-யை ஆன்லைன் மூலமா கவே செலுத் தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இது குறித்து பேசிய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கூறுகையில், “வரி செலுத்து வதற்கு சிறந்த வழியாக ஆன் லைன் சேவை உள்ளது. 

எனவே, வரி செலுத்து வோர் மின்னணு முறையில் NEFT, RTGS ஆகிய வற்றில் செலுத் தலாம்.

மேலும், தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவும் செலுத் தலாம்.

அதற்காக வரி செலுத் துவோர் அரசு வங்கியில் தான் கணக்கு வைத்தி ருக்க வேண்டும் என்ற அவசி மில்லை. 


தனியார் வங்கிக் கணக்கு மூலமா கவும் வரி செலுத் தலாம். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கும்.

இதன் மூலம் வர்த்த கர்கள் அதிக பயன் பெறுவார் கள். மேலும், மாநில அரசுகள் சேவைத் துறைக்கு அதிக முக்கியத் துவம் அளிக்க வேண்டும்.

இந்தியா பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளை மேற் கொண்டு வருகிறது. 

அதில் முக்கிய மான ஒன்று ஜி.எஸ்.டி. சுதந்திர மடைந்த பின்னர் இந்தியா வில் மேற் கொள்ளும் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை இது தான்.

இந்த வரிவிதிப் பில் வரித் தொகை யானது நேரடியாக அரசுக்கு செல்லும்” என்றார் அவர்.
Tags:
Privacy and cookie settings