நைஜீரியா நாட்டில் கை, கால்கள் இல்லாமல் பிறந்து, தினம் தினம் மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டுக்குள் மாமிச துண்டம் போல் இளம்பெண் ஒருவர் வாழ்ந்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை ரஹ்மா அருமா, பிறந்து ஆறு மாதத்தில் மர்மமான நோய் அறிகுறியுடன் அவதிப்படுவதை கவனித்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த மர்மநோய் அவரது உடல் உறுப்புக ளின் வளர்ச் சியை பாதித்தது.
தற்போது சுமார் 20 வயதை அடைந்தாலும் ரஹ்மா கை, கால்கள் இல்லாமல் அவரது உடல் அமைப்பு மிகச் சிறியதாக ‘மரப்பாச்சி’ பொம்மை போல் இருக்கிறது.
தனது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரின் உதவியை நாடும் நிலையில் அவர் உள்ளார்.
தினம் தினம் உடலில் ஏற்படும் வலியுடனும், வேதனையுடனும் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டுக்குள் (பிளாஸ்டிக் டப்) தனது ஆயுளை கழித்து வருகிறார்.
ரஹ்மா வின் சகோதரர் பாஹட், அவருக்கு எல்லா உதவிக ளையும் அன்புடன் செய்து வருகிறார். அவளை கிராம த்தில் உள்ள எல்லா இடங்க ளுக்கும் சளைக் காமல் அழைத்து செல்கிறார்.
கை, கால்களை இழந்த ரஹ்மா வின் இந்த வாழ்க் கையை வெளி உலகம் அறிய இவர்கள் எடுக்கும் முயற்சியால்,
அவரின் மருத்துவ உதவிக்கும், பிற உதவிகளுக்கும் பலரிடம் இருந்து நன்கொடைகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
தற்போது, பிளாஸ்டிக் பக்கெட்டு க்குள் இருந்தபடியே சக்கர நாற்காலியில் வலம் வரும் ரஹ்மா, தனியாக ஒரு மளிகை கடை வைத்து தொழில் நடத்த வேண்டும்
என்று ஆசை இருப்பதா கவும், மக்கள் தங்களுக்கு தேவையா னவற்றை என் கடைக்கு வந்து வாங்கி செல்ல வேண்டும் என்று விரும்புவ தாகவும் தன்னம் பிக்கை தவழும் புன்னகை யுடன் கூறினார்.