அந்தப் பெண் திவ்யா ..அழகான பெண்..! முப்பத்தி ஐந்து வயது..! கல்யாணம் ஆக வில்லை. காரணம் செவ்வாய் தோஷம்.
எத்தனையோ வரன் பார்த்தார்கள். எவ்வளவோ கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால் உயிருக் குப் பயந்த ஆண்கள் பயந்து ஓடிப் போனார்கள்.
இரண்டாம் தாரம் கூட ஒகே என்றால் அதற்கும் யாரும் தயாராக இல்லை. ஜோதிடர் ஒரே வார்த்தை சொன்னார்
இந்த பொண்ணுக்கு கல்யாண பிராப்தமே இல்லை என்று அடித்துக் கூறினார். அவ்வளவு சொத்து இருந்து என்ன செய்ய? அந்தப் பெண் வீட்டுக்குளேயே முடங்கிப் போனாள்.
அம்மா பெரிய பாக்டரியின் உயர் அதிகாரி. பூர்வீகச் சொத்துக்களும் அதிகம். திவ்யாவிற்கு ஏக்கம் கனவு, ஆசை, உடல் பசி எல்லாம் இருந்தது.ஆண் வாசமே அவள் மேல் படவில்லை.
ஒரு நாள் இரவு அம்மாவை தட்டி எழுப்பினாள் திவ்யா. அம்மா பயந்து போய் எழுந்தாள்.
அம்மா என்னால முடிய லைம்மா எனக்கு யாராவது வேணும்மா என்று கதற அம்மாவும் கதறினாள். வயிறு பசி என்றால் கொடுக் கலாம். உடல் பசிக்கு என்ன செய்வது.?
அடுத்த நாள் முதல் அந்த விஷயத் திற்கு யார் யாரையோ கேட்டாள். பயந்து போய் இந்த அம்மா என்ன லூசா என்று ஒதுங்கினர்.
அடுத்த நாள் லாண்டரிப் பையன் குமார் துணி கொண்டு வந்தான். அந்த பையனுக்கு யாரும் இல்லை.
இருபத்து மூன்று வயது இருக்கும். அவனிடம் அம்மா பக்குவ மாக தன மகள் பற்றி கூறி பணம் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன்.
ஒரு நாளாவது ஏன் மகளுடன் தூங்கு என்று கதறினாள். அந்த பையனுக்கு பாவமாகப் போய் விட்டது.
அன்று வெள்ளிக் கிழமை. அம்மா தன மகளை நன்றாக அலங் கரித்தாள் .அந்த பையனை குளிக்க வைத்து புது உடைகள் அணிவித்து அறைக்கு அனுப்பி வைத்தாள் அம்மா.
மறு நாள் காலை இருவரும் வெளியே வந்தார்கள். திவ்யா முகத்தில் அப்படி ஒரு அமைதி, சந்தோஷம், பூரிப்பு. அந்த பையனுக்கு பணம் கொடுத்தாள். அவன் வாங்க மறுத்தான்.
ஒரு கணவனைப் போல அனுப்பி விட்டு, மகளையும் கொடுத்து, பணமும் கொடுத்தால் எப்படி வேண்டாம்மா என்று கூறி விட்டு போய் விட்டான்.
அசந்து போனாள் அந்த அம்மா. மகளுக்கும் குமாரை மிகவும் பிடித்து விட்டது. அடுத்த நாள் குமாரை வரச் சொன்னாள்.
ஏன் மகளுக்கு செவ்வாய் தோஷம் நீ கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா? என்று கேட்க அவன் தயங்காமல் சொன்னான்
இப்படி ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து அடுத்தா நாளே இறந்தாலும் பரவாயில்லை என்றான்..!
ஊர் அறிய திருமணம் நடந்தது..! இன்று அந்தப் பையனின் சொத்து மதிப்பு முன்னூறு கோடி. எந்த பிரச்னையும் இல்லாமல் நன்றாகவே வாழ்ந்து வருகிறா ர்கள்..! வாழ்க மணமக்கள்..!