கார் வேண்டாம். அதற்கு பதிலாக பணம் கொடுங்கள் ஒலிம்பிக் சாம்பியன் | I do not want the car. Give money instead Olympic champion |

ஒலிம்பிக் பாட்மிண் டனில் வெள்ளி வென்ற சிந்து, மல்யுத்த த்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி, இந்திய ஒலிம்பிக் வரலாற் றில் முதல் முறை யாக ஜிம்னாஸ் டிக்ஸ் 
இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய தீபா கர்மாகர், சிந்துவின் பயிற் சியாளர் கோபிசந்த் ஆகியோ ருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளி ப்பதாக ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத் தலைவர் சாமுண்டேஷ்வர நாத் அறிவித்தார்.

ரியோ ஒலிம்பிக் கிற்கான இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் சச்சின், ஹைதராபா தில் நடைபெற்ற அதற்கான நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு நால்வரு க்கும் கார்களை பரிசாக வழங் கினார். (அந்த காரின் மதிப்பு ரூ. 30-35 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப் படுகிறது.)

இந்நிலை யில் தனக்கு வழங்கப் பட்ட சொகுசு காருக்குப் பதிலாக வேறொரு காரை வாங்க முடிவு செய்து ள்ளார் தீபா கர்மாகர். இது குறித்து அவருடைய தந்தை துலால் கர்மாகர் கூறும் போது, நாங்கள் காரைத் திருப்பித் தரவில்லை.

அதற்குப் பதிலாக வேறு காரை வாங்க முடிவு செய்து ள்ளோம். அகர்தாலா வில் பிஎம் டபிள்யூ சர்வீஸ் செண்டர் கிடையாது. அதை ஓட்டக் கூடிய ஓட்டுநரும் கிடைக்க வில்லை.

மேலும் எங்கள் ஊரின் ஊரின் சாலைக ளில் இந்தச் சொகுசு காரை ஓட்டுவது எளிதாக இல்லை. இது குறித்து ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத்திடம் பேசி விட்டோம். காருக்கு இணை யான தொகையை வழங்கி விடுங்கள். 

வேறு கார் வாங்கிக் கொள்கி றோம் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். விரைவில் அந்தப் பணத்தைக் கொண்டு எங்கள் ஊரிலேயே ஒரு காரை வாங்கி விடுவோம் என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings