செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சியில் மீண்டும் சீட் !

அரவக் குறிச்சி தொகுதிக்கு வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப் பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடி வருகின்றனர். 
செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சியில் மீண்டும் சீட் !
அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் எதிர் முகாமில் அதிர்ச்சி பரவியுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது மிகப் பிரபலமான அமைச்சர்களில் முக்கியமானவர் செந்தில் பாலாஜி. 

இளம் வயதில் அதாவது 36வது அமைச்சரான இவர் கரூரை அடுத்த ராமேஸ்வரப் பட்டி என்னும் குக்கிராமத்தை சேர்ந்தவர். 

விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஜெயலலிதா மீது உள்ள அதீத விசுவாசத்தால் படிப்படியாக அதிமுக அமைச்சர வையில் போக்குவரத்து துறை அமைச்சராகும் அளவிற்கு முன்னேறினார்.

கரூரில் திடீர் வளர்ச்சி யடைந்து மாவட்ட செயலாளர், அமைச்சராக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. ஜூனியரான இவரது வளர்ச்சி சீனியர் களுக்கு பிடிக்க வில்லை. காரணம் இவர் சீனியர் களை மதிக்காதது தான் என்று கூறப் பட்டது.

இறங்கு முகம்
ஜெயலலிதாவுக்காக அங்கப் பிரதட்சணமும் செய்தார். இப்படி ஏறு முகத்தோடு இருந்த செந்தில் பாலாஜிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சாதிக் உருவத்தில் வந்தது தலைவலி. 

போயஸ் தோட்டத்தில் செல்லப் பிள்ளையாக வலம் வந்த செந்தில் பாலாஜி திடீரென டம்மியாக்கப் பட்டார். எதிர் கோஷ்டியினர் தொடர்ந்து அடித்த அடியில் வீழ்ந்தே போனார்.

தம்பிதுரை

ஆதிக்கம் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவி யில் இருந்து நீக்கப் பட்ட செந்தில் பாலாஜியை, ஓரம் கட்டினார் சீனியர் தம்பித் துரை. லோக்சபா தேர்தலில்   

கரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியான தம்பிதுரை நாடாளு மன்ற துணை சபாநாயகர் ஆனார். இந்த பதவிக்கு வந்த பின்னர், கரூர் மாவட்ட அதிமுக வை அவர் தனது ஆதிக்கத் தின் கீழ் கொண்டு வந்தார்.
அரவக்குறிச்சி

கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு, இந்த தொகுதி கிடைக்க வில்லை. மாறாக அவருக்கு அரவக் குறிச்சி ஒதுக்கப் பட்டது. 

கரூர் தொகுதியில் தான் போட்டியிடப் போகிறோம் என எண்ணி யிருந்த செந்தில் பாலாஜிக்கு பக்கத்து தொகுதி யான அரவக் குறிச்சிக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டதால் 
 
அங்கு பலம் வாய்ந்த எதிர்கட்சி வேட்பாளர் கே.சி.பழனிச் சாமியுடன் போட்டியிட வேண்டியி ருந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

தேர்தல் ரத்து

பணப்பட்டு வாடா புகாரால் அரவக் குறிச்சி தேர்தல் நிறுத்தப் பட்டதை தொடர்ந்து செந்தில் பாலாஜியை கட்சியில் இருந்து முழுவதும் ஓரம் கட்டினர். தம்பித்துரை.

கரூர் தொகுதி யில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனது ஆதரவாள ரான விஜய பாஸ்கரு க்கு, செந்தில் பாலாஜி வகித்த அதே போக்கு வரத்து துறையை பெற்று தந்தார் தம்பிதுரை.
மோசடி புகார்கள்

போக்கு வரத்து துறையில் பணி நியமன ங்கள் தொடர்பாக 60 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக கூறி சிவங்கையை சேர்ந்த 
 
நபர் ஒருவர் வழக்கு தொடுத்ததால் மேலும் சிக்கலாகி போனது செந்தில் பாலாஜி யின் நிலைமை. கடந்த மாதம் 

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பும் வெளியாகி அதில் செந்தில் பாலாஜி குற்ற மற்றவர் என நிரூபிக்கப் பட்டதால் தலைமை யின் கவனம் மீண்டும் செந்தில் பாலாஜி யின் பக்கம் திரும்பியது.

எதிர்முகாம் தீவிரம்

இந்நிலை யில் கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது அரவக் குறிச்சியில் போட்டி யிட்ட செந்தில் நாதனை மீண்டும் வேட்பாள ராக்க தம்பி துரை கோஷ்டி தீவிர முயற்சி யில் இறங்கியது. 
அவரும் கட்சி நிகழ்ச்சி களில் முன்னிலைப் படுத்தபட்டு வந்தார். இந்நிலை யில் மீண்டும் வேட்பாளராக செந்தில் பாலாஜி யையே அதிமுக அறிவித் துள்ளது. இதனால் அவரது எதிர் கோஷ்டி யினர் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.

சொல்லியடித்த செந்தில் பாலாஜி

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜியை மீண்டும் வேட்பாள ராக அறிவித்து விடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு அவரது எதிரணி வேலை பார்த்தது. 

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்புக் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் ஜெயிப்பது அதை விட சிரமம் என்று சொல்ல ஆரம்பித்தனர். 
 
ஆனால் எதிர்பாராம விதமாக செந்தில் பாலாஜிக்கே வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

சசிகலா ஆதரவு

கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூ ரில் நடைபெற்ற விவேக் திருமண வரவேற் பில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி, சசிகலாவி டமும், மன்னார்குடி சொந்தங்க ளிடமும் தன்னிலை விளக்கம் அளித் தாராம். 
செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சியில் மீண்டும் சீட் !
இதன் காரணமா கவே முன்பு அறிவித்த வேட்பா ளரையே மாற்றாமல் அறிவித் துள்ளார் சசிகலா என்கின்றனர்.

செந்தில்பாலாஜி

வளர்ச்சி திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி யை கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக தலைமை நியமித்தது. 
 
தொடர்ந்து கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலா ளராகவும் நியமிக்கப் பட்ட செந்தில் பாலாஜி,2006ஆம் ஆண்டு முதன் முறை யாக கரூர் சட்ட மன்றத் தொகுதி யில் இருந்து எம்எல் ஏவானார். 
 
2007ஆம் ஆண்டில் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா ளராகவும் கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாள ராகவும் நியமிக்கப் பட்டார். 

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி, போக்கு வரத்துத் துறை அமைச்ச ரானார்.
வெற்றி பெறுவாரா?

2015ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்த இவருக்கு, மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தலைமை வழங்கி இருக்கிறது. 

எதிர்க கோஷ்டியினர் அடி அடியென அடித்தும், முட்டி மோதி அடித்து பிடித்து மீண்டும் அரவக் குறிச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். 
 
எதிர் கட்சிகளை வெல்வதை விட தனது கட்சியில் உள்ள எதிர் அணியினரை வென்று வெற்றி பெறுவாரா செந்தில் பாலாஜி?
Tags:
Privacy and cookie settings