இந்தியா வில் உள்ள சில வங்கிகள் வழங்கிய ஏ.டி.எம். அட்டைகள், இணை யதள மோசடி கும்பலின் அச்சுறுத் தலுக்கு இலக்காகி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.டி.எம். அட்டையில் உள்ள ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட பாதுகாப்பு குறியீடுகளை திருடி, அக்கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கடந்த மே மாதத்தில் இருந்து ஜூலை மாதத்துக்குள் இந்த திருட்டு நடந்துள்ளது. ஆனால், கடந்த மாதம் தான் இது கண்டு பிடிக்கப் பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ. வங்கி, சென்டிரல் வங்கி, ஆந்திரா வங்கி, எச்.டி. எப்.சி. வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகளின்
வாடிக்கை யாளர்களுடைய ஏ.டி.எம். கார்டுகள் இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத் தலுக்கு இலக்காகி உள்ளன.
32 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகளுக்கு இந்த அச்சுறு த்தல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கை யாளர்களின் 6 லட்சம் ஏ.டி.எம். அட்டை களை திரும்ப பெற்றுள்ளது.
சில அட்டை களை முடக்கி உள்ளது. பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ. வங்கி, சென்டிரல் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய வங்கிகள், அச்சுறுத் தலுக்கு இலக் காகி உள்ள அட்டை களை முடக்கி விட்டு,
மாற்று அட்டைகள் வழங்கி உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகள்,
ஏ.டி.எம். அட்டையின் ரகசிய குறியீட்டு எண்ணை (பின்) மாற்று மாறு வாடிக்கை யாளர்களை அறிவுறுத்தி உள்ளன.
எச்.டி.எப்.சி. வங்கி, தனது ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் எடுக்கு மாறு வாடிக் கையாள ர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வகையில், 32 லட்சத் துக்கும் மேற்பட்ட அட்டை களும் முடக்கம் அல்லது திரும்ப பெறும் நடவடிக் கைக்கு உட் படுத்தப் பட்டுள்ளன.
இது குறித்து, டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் கூறுகையில், தகவல்கள் திருடப்பட்டதால் 32 லட்சம் ஏ.டி.எம் அட்டைகள் முடக்கம்.
இதற்கே இந்த நிலை என்றால் ஆதார் விவரங்களின் கதி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதார் அட்டைகளில் கண் விழித்திரை, கைரேகை உட்பட பல்வேறு தனி மனித அந்தரங்க தகவல்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன.
அவற்றில் திருட்டு நடை பெற்று, மோசடி நடை பெறாது என்பதற்கு என்ன உறுதி யுள்ளது என்பது ராமதாாஸ் கேள்வி. மத்திய அரசு இதற்கு பதில் சொல்லுமா?