தோஷம் கழிப்பதாக ஏமாற்றி நகை திருடியவர் கைது !

தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் சிவசண்முகம் தெருவைச் சேர்ந்தவர் சிவநேசன். இவரது மனைவி காளீஸ்வரி (33) நேற்று காலை வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
தோஷம் கழிப்பதாக ஏமாற்றி நகை திருடியவர் கைது !
அப்போது அங்கு வந்த 2 இளைஞர்கள், உங்கள் வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளது. பரிகார பூஜை செய்தால் சரியாகி விடும் என்று கூறினர். 

அதற்கு மறுப்புத் தெரிவித்த காளீஸ்வரி எந்த பரிகாரமும் வேண் டாம் என கூறி விட்டார். அப்போது ஒரு இளைஞர் தண்ணீர் கேட்டுள்ளார். 

தண்ணீர் கொண்டு வருவதற்குள் வீட்டினுள் சென்று அமர்ந்து கொண்ட 2 இளைஞர்களும், அவரிடம் தொடர்ந்து பேசி சமாதானம் செய்துள்ளனர். 

நகையை கழட்டி வைத்து பூஜை செய்தால் தோஷம் தீரும் எனக்கூறி அவ்வாறு பூஜை மேற் கொண்டனர். 

பிறகு, 3 சவரன் நகையை பேப்பரில் கட்டி சாமி படம் முன்பு வைத்து விட்டு, மாலையில் தான் திறந்து பார்க்க வேண்டும் என கூறி விட்டு புறப் பட்டனர்.

எனினும், சுதாரித்துக் கொண்ட காளீஸ்வரி, நகை இருந்த பேப்பரை பிரித்து பார்த்தார். அதில் நகை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். 
அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, 2 இளைஞர் களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படை த்தனர். பீர்க்கன் காரணை போலீஸா ரின் விசாரணையில், 

இருவரும் வேலூர் மாவட்ட த்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் செல்வகுமார் என்பதும், சென்னையின் பல்வேறு இடங்களில் மக்களை ஏமாற்றி நகை பறித்து வந்ததும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Tags:
Privacy and cookie settings