கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் வசூலைக் குவித்து வெற்றிப் பெற்ற ரஜினியின் கபாலி படம் முதல் முறையாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பாக விருக்கிறது.
ஆனால் தமிழில் அல்ல... மலையாள தொலைக் காட்சியில். ஆசியா நெட் தொலைக் காட்சியில் கபாலி படத்தை தீபாவளி யன்றே ஒளிபரப்பு வதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது.
பிறகு தான் தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகுமாம். மலையாள தொலைக் காட்சியில் ஒளிபரப்பானாலும், கபாலியின் தமிழ் பதிப்பைத் தான் ரசிகர்கள் பார்க்க விருக்கிறார்கள்.
காரணம் கபாலி கேரளாவில் நேரடித் தமிழ்ப் படமாகத் தான் வெளியானது.
இது வரை கேரளாவில் வேறு எந்தப் படமும் குவிக்காத பெரும் வசூலைக் குவித்தது கபாலி. மீண்டும் கபாலியை,
அதுவும் தங்கள் வீட்டு வரவேற் பறையிலேயே காணும் வாய்ப்பு கிடைத் துள்ளது தமிழ், மலையாள ரசிகர் களுக்கு.