எனது அரசியல் வாரிசு ஸ்டாலின் என்று கருணாநிதி பேட்டி !

1 minute read
மு.க.ஸ்டாலின் தான் தனது அரசியல் வாரிசு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், கழகத்தில் இல்லாத அழகிரியை நினைத்து வருத்தப் படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனது அரசியல் வாரிசு ஸ்டாலின் என்று கருணாநிதி பேட்டி !
விகடன் வார இதழுக்கு கருணாநிதி அளித் துள்ள பேட்டியில், இத்தகவலை அவர் கூறியுள்ளார். ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற பேச்சும் எதிர் பார்ப்பும் பரவலாக உள்ளதே. 

உங்கள் அரசியல் வாரிசு யார்? என்று எழுப்பப் பட்டுள்ள கேள்வி க்கு, கருணாநிதி கூறியுள்ள பதிலை பாருங்கள். 

ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்தி லேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, 

பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத் தானே படிப்படி யாக உயர்த்திக் கொண்டவர். 

அந்த வகையில், அவர் தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 

ஸ்டாலின் செயல் பாட்டை எப்படிக் கணிக் கிறீர்கள்? என்ற கேள்விக்கு, தம்பி ஸ்டாலினின் செயல்பாடு, சிறப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.
கட்சியி னரையும் கட்சியையும் அவர் வழி நடத்திச் செல்லும் பாங்கு, மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார். 

தி.மு.க வில் மு.க.அழகிரி இல்லா ததை, ஓர் இழப்பாக நீங்கள் கருதுகிறீர்களா? என்ற ஒரு கேள்விக்கு, இருப்பதை எண்ணி மகிழ்ந்து, மேலும் மேலும் முன்னேற்றப் பாதை யில் நடை போட வேண்டுமே தவிர, 

கழகத்தில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து, ஏங்கி நிற்பது பயணத்து க்குத் தடையாகி விடும் இவ்வாறு கருணாநிதி பதிலளித் துள்ளார்.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings