இரட்டைக் குழந்தைகளுக்கு ஷாப்பிங் பண்ண நினைக்கிறவங்க பெரும் பாலும் அவங்க தேவையையும் விருப்பத்தையும் சொல்லி ஆர்டர் கொடுத்து வாங்கறது தான் அதிகம்.
அவசரமா வாங்க நினைக்கிற வங்களுக்கு ஒரே கலர்ல ஒரே மாதிரியான அயிட்டங்கள் ரெண்டோ, ஒரே அயிட்டத்தை வேற வேற கலர் மற்றும் டிசைன்லயோ செலக்ட் பண்ணி எடுத்துக் கொடுப்போம்.
பிறந்த குழந்தைங்களுக்கு ஷாப்பிங் பண்றவங்க ரொம்ப கிரியேட்டிவா யோசிக்கிற தில்லை. பிறந்த டைம்ல குழந்தைங்களுக்கு எது உபயோகமா இருக்குமோ அந்தப் பொருட்களைத் தான் வாங்கிக் கொடுக்கறாங்க.
அப்படிப் பார்த்தா டபுள் ஃபீடிங் பாட்டில் பவுச், ரெண்டு குழந்தைகளு க்கான டிரெஸ், படுக்க வைக்க குட்டிக்குட்டி தலையணை வச்ச பெட்,
ரெண்டு அடுக்கு கொண்ட தொட்டில், குல்லா, ஸ்வெட்டர், காலுக்கு பூட்ஸ்... இப்படிப் பொதுவான பொருட்களைத் தான் அதிகம் வாங்கறாங்க. குழந்தைங்க ஓரளவு வளர்ந்ததும் தான் கிரியேட்டிவான
அன்பளிப்பு களைக் கொடுக்க நினைக்கிறாங்க என்கிறார் `மை பேபி’ உரிமையாளர் வெங்கட்.
இரட்டையருக்கான ஷாப்பி ங்கில் லேட்டஸ்ட்டான மற்றும் பிரபலமான சில பொருட் களைப் பற்றிய தகவல் களைத் தருகிறார் அவர்.
உடைகள்
இரட்டைக் குழந்தைக ளுக்குக் குறிப்பிட்ட வயது வரைதான் ஒன்று போல உடை அணிவி த்துப் பார்த்து மகிழ முடியும். பிறகு ஒரே மாதிரி அணிவதை அவர்களே விரும்ப மாட்டார்கள்.
உடைகளில் வித்தியாச மான வாசகங்கள் பதித்தோ, பாதிப்பாதி உருவங்கள் பதித்தோ (இரு வரையும் சேர்த்து நிறுத்தினால் முழு உருவமும் தெரிகிற மாதிரி),
இரட்டையர் என்கிற அர்த்தம் வருகிற மாதிரியான வார்த்தைகளோ, பொம்மை களோ பதித்தோ டிசைன் செய்யலாம்.
பேபி கேரியர்
கருவிலி ருந்தே இரண்டு குழந்தை களை சுமந்து பழகுகிற தாய்க்கு, பிரசவத்து க்குப் பிறகும் அது தொடரும். இரண்டு குழந்தை களையும் தூக்கிக் கொண்டு வெளியே செல்ல
எப்போதும் உதவிக்கு இன்னொரு வரை எதிர் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இரண்டு குழந்தை களையும் சுலபமாகத் தூக்கிச் செல்லும் பேபி கேரியர்கள் அம்மாக்களுக்கு நிஜமான வரப் பிரசாதம்.
பாதுகாப்பான பெல்ட், குழந்தை சாய்ந்து கொள்ள ஏதுவான Back rest உடன் கூடிய இது ஒரு குழந்தைக் கானது, இரட்டையரு க்கானது என தனித் தனியே கிடைக்கிறது.
போர்ட்டபுள் பிளேயார்ட்
இது எங்க ஏரியா... உள்ளே வராதே...’ என்கிற மாதிரி இரு வருக்கும் மட்டுமே யான விளையாட்டு ஏரியா இது. அவ்வப் போது மடக்கி, பிரித்து வைக்கக் கூடியது. எங்கேயும் கொண்டு செல்லலாம்.
பிரித்து விட்டு, உள்ளே கொஞ்சம் விளை யாட்டுப் பொருட்களையும் போட்டு, இரு வரையும் உள்ளே விட்டு விட்டால், அவர்களது உலகில் அழகாக ஐக்கிய மாகி விடுவார்கள். அம்மாவும் கொஞ்ச நேரம் அவரது வேலையைப் பார்க்க லாம்.
போட்டோ ஃப்ரேம்
அன்பளிப்பு கொடுக்க நினைக்கி றவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் இது. இரட்டைய ருக்கான போட்டோ ஃப்ரேம்களில் ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கி ன்றன.
வெறும் போட்டோக்களை மட்டும் வைக்காமல், கூடவே நினைவு களையும் சேர்த்து எழுதி வைக்கிற மாதிரியான புதுமையான ஃப்ரேம்களும் ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கப் படுகின்றன.
ஸ்ட்ராலர்
குழந்தை களை உட்கார வைத்துத் தள்ளிச் செல்கிற ஸ்ட்ராலர் எனப்படுகிற தள்ளு வண்டியிலும் இப்போது இரண்டு குழந்தைகளு க்கானது வந்துள்ளது.
ஒரே நேரத்தில் 2 குழந்தைகளையும் அதனுள் உட்கார வைத்து, வெளியே அழைத்துச் செல்லலாம்.