டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையத்திற்கு செல்லும் மெட்ரோ ரயிலில் இலவச வை பை வசதி நேற்று முதல் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங் களிலும் இலவச வை-பை வசதி விரைவில் கொண்டு வர மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இதற்காக எம்.எஸ். டெக்னோசாட் கம்யூனி கேஷன் நிறுவனத்திடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயிலில் இலவச வை-பை வசதி நேற்று முதல் மக்கள் பயன் பாட்டிற்கு வந்துள்ளது.
இதனை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை தலைவர் டாக்டர். மாங்கு சிங் தொடங்கி வைத்தார். ஒரு மணி நேர பயண தூரம், (18 கி.மீ) கொண்ட இந்த வழித்தடத்தில் இந்த வை-பை சேவை அறிமுகப் படுத்த பட்டுள்ளது.
இந்த வை-பை சேவையானது அதிவேகம் கொண்டதாக இருக்கும் என்றும், ஒரு சில நிமிடங்களிலோயே ஒரு திரைப் படத்தை முழுமையாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.