இயற்கையானது தன்னுள் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது. இந்த ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் கண்டுபிடிக்க முடியா விட்டாலும், அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.
இந்த பூமியில் மர்மமான விஷயம் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பெர்முடா முக்கோணம்.
இந்த பகுதிக்குள் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் காணாமல் போகிவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன.
ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது. அதை பற்றியே இந்த செய்தியில் காணப் போகிறோம்.....
விமானங்கள், கப்பல்களை விழுங்கிய வட அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த நிலையில் தற்போது அந்த புதிர் விலகியுள்ளது.
வட அட்லாண்டிக் கடல் பகுதியின் பெர்முடா, மியாமி மற்றும் போர்டோ ரிகோ (puerto rico) தீவு பகுதிகளின்
முக்கோண வடிவிலான இணைப்பே பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப் படுகிறது. இது Devils Triangle என்றும் அழைக்கப்படுகிறது
5,00,000 சதுரஅடி பரப்பளவில் அமைந்தி ருக்கும் இந்த முக்கோண பகுதி ராட்சச பகுதி என்றே கூறலாம்.
அதற்குக் காரணம், இந்த கடல் பகுதி வழியே கடந்து செல்லும் விமானங்களும், கப்பல்களும் மாயமாய் மறைந்து போவது தான்.
மேலும் நீரினுள் கவர்ந்து உள்ளிழுக்கப் படுவதாகவும் இது வரை கருதப்பட்டு வந்தது. இதற்கு யாராலும் காரணமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ்.
இரத்த சோகை ஒரு சிறப்பு பார்வை !
அமெரிக்காவின் பார்போடாஸ் தீவுகளிலிருந்து 1918ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’என்ற கப்பல் காணாமல் போனது.
1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும் போது காணாமல் போயின.
இந்த விமானம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த விமானம் போதுமான எரிபொருள் இல்லாமல் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.
1949ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நடந்த சம்பவங்களால் அது மர்மம் நிறைந்த பிரதேசமாகவே திகழ்கிறது.
இதற்கு பலர் பல்வேறு காரணங்கள் சொன்னாலும் உண்மையான காரணம் கிடைக்க வில்லை.
ஒரு முறை அந்த பகுதியில் இருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன அனுபவம் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது.
இந்த பெர்முடா பகுதி அமானுஷ்யங்கள் நிறைந்த பகுதியாகவும், நீருக்கடியில் வாழ்வதாக கூறப்படும் அட்லாண்டிஸ் மக்கள் தான் இதைச் செய்வதாகவும்.
இவர்கள் விரைவில் நீருக்கடியிலிருந்து வெளியே வந்து பூமியை கைப்பற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அப்படியான யாரும் நீருக்கடியில் வாழ்வதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவர் மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது திசைகாட்டும் கருவி வேகமாக சுற்றிக் கொண்டே இருந்தது. தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை.
மேலும் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோ மீட்டர் நீளமான அந்த வழியை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அது தான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது. இது பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் கடலின் அடியில் இருக்கும் உயிரோட்ட மான எரிமலை தான் இந்த விபத்துகளுக்கு காரணம் என கண்டறியப்பட்டது.
இருப்பினும், எரி மலைகள் ஆகாயத்தில் பயணிக்கும் விமானங்களை எவ்வாறு உள்ளிழுக்கும் என்று பல சந்தேகங்கள் எழுந்தது.
இதன் பின், பல ஆய்வாளர்கள் இந்த மர்ம முக்கோணத்தை பற்றி ஆய்வை மேற் கொண்டனர்.
அமெரிக்காவின், கொலராடோ பல்கலைக்கழக வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவ் மில்லர் நடத்திய ஆய்வில்,
பெர்முடா முக்கோண பகுதிக்கு மேல் உள்ள மேகங்கள், நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் தான் இவ்வாறு நடப்பதாக தெரிவித்தார்.
இதனை தெளிவுபடுத்தும் வகையில், ரேடார் செயற்கைக்கோளை பயன் படுத்தி மேகங்களுக்கு கீழ் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்தார்.
அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டது.
பெர்முடா முக்கோணப் பகுதிக்கு மேலிருக்கும் மேகக் கூட்டங்கள் அறு கோண வடிவில் வினோதமாகக் காணப்படுவதாகவும், இவை 32 முதல் 80 கிலோ மீட்டர் வரை பரந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப் பட்டது.
பெர்முடா கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் எழும்பு வதால், 45 அடி உயரத்திற்கு சக்தி வாய்ந்த
அலைகள் உருவாகி, விமானங்களை நிலை குலைய வைத்து கடலில் விழச் செய்வது உறுதிபடுத்த பட்டுள்ளது.
இது குறித்து, வானியல் ஆய்வாளர் ராண்டு செர்வனி மேற் கொண்ட ஆய்வில், காற்று கடற் பரப்பின் மீது வேகமாக மோதும் போது
சுமார் 45 அடி உயரத் திற்கு அலை எழும்புவதால் அவ்வழியாக செல்லும் கப்பல்கள் உள்ளிழுக்க படுவதாக கண்டுபிடித்து ள்ளனர்.
எப்படியோ இத்தனை ஆண்டு கால மர்மம் ஒரு வழியாகத் தெளிவாகி இருக்கிறது.