‘சாலை விபத்துகள்’, நம்முடைய அன்றாடப் பிரச்னை களில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் சாலை விபத்து களின் அபரிமித மான எண்ணி க்கை நம்மை அந்த மனநிலை க்கு மாற்றி உள்ளது.
அதிக வேகம், குடி போதை, போக்கு வரத்து விதிகளை மீறுவது, மோசமான வாகன ங்கள், மோசமான சாலைகள் என ஒவ்வொரு சாலை விபத்து மரணத்து க்கும் ஒவ்வொரு காரணம்.
இவற்றில் பரிதாபமான காரணம் என ஒன்றைப் பட்டிய லிடலாம். விபத்தில் சிக்கியவர், உதவ ஆள் இல்லாமல், உயிரை விட நேர்வது தான் பரிதாப மான காரணம்.
பரபரப் பான நகர வீதியில் விபத்து நடந் தாலும், உதவ ஒரு ஆள் வராது. அதற்கு காரணம், உதவ நினைப் பவருக்கு பின்னால் வரும் தொல் லைகள்.
உதவி செய்த வரை விசாரிக்க போலீஸ் வரும்; போலீஸ் விசாரணை யோடு போகாது; சாட்சி சொல்ல நீதிமன் றத்தில் இருந்து நோட்டீஸ் வந்து அழைக்கும்.
இப்படிப் பட்ட தொடர்ச்சி யான தொல்லை களைத் தவிர்க்க, உதவி செய்ய மனமி ருந்தாலும்... நேரம் இருந் தாலும்.
அமைதியாக ஒதுங்கிக் செல்வது உத்தமம்” என நினைத்து பலரும் விலகிச் சென்று விடுவார்கள்.
விபத்தில் பாதிக்கப் பட்டவர், உயிர் பிழைக்க வாய்ப் பிருந்தும், சரியான நேரத்துக்கு மருத்துவ மனைக்குப் போக முடியா ததால் பரிதாப மாக உயிரை விடுவார்.
இந்த நிலையை மாற்ற, கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பி த்தது. அதில், “விபத்து சமயங்களில் உதவிய வர்களை அலைக் கழிக்கக் கூடாது.
அதற்கேற்றவாறு மத்திய-மாநில அரசுகள் வழிமுறை களை உருவாக்கி விதிமுறை களை மாற்ற வேண்டும்” என்றது.
அதைப் பின்பற்றி மத்திய அரசு சில வழி காட்டுதல் முறைகளை வகுத்தது. அதை யடுத்து, தற்போது தமிழக அரசும்சில வழி காட்டுதல் நெறி முறைகளை உருவாக்கி உள்ளது.
அதில் குறிப்பிடப் பட்டுள்ள அம்சங்கள்.
1. விபத்தில் காயமடைந் தவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து வருபவர் களிடம் எந்தக் கேள்வியும் கேட்க க்கூடாது. தேவைப் பட்டால், அவர்க ளுடைய முகவ ரியை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.
2. விபத்தில் சிக்கியவர் களுக்கு, உதவி செய்தவர் களுக்கு அரசாங்கம் தக்க சன்மானம் வழங்கும்.
இது, பொது மக்கள் மத்தியில், விபத்து நேரங்க ளில் உதவும் எண்ண த்தை வளர்க்கும்.
3. விபத்தில் சிக்கியவர் களுக்கு உதவி செய்பவர்கள், அந்த விபத்து தொடர்பான எந்த ஒரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கை களுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்.
4. காவல் நிலையம், விபத்து சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு, விபத்து தொடர் பான விவரங்களை தெரிவிக்கும் நபரின் பெயர் உள்ளிட்ட சொந்த விவரங் களை தெரிவிக் குமாறு கட்டாய ப்படுத்தக் கூடாது.
5. விபத்தில் சிக்கியவர் களுக்கு உதவுப வர்கள் சொந்த விவரம், தொடர்பு விவரங்களை அளிப்பது அவர்களது விருப்ப த்தை பொறுத் தது.
மருத்துவத் துறை விண்ணப் பங்களில், அதை நிரப்பச் சொல்லி கட்டாய ப்படுத்தக் கூடாது.
6. உதவி செய்பவர் களின் பெயர், சொந்த விவரங் களை தெரிவிக்க கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு மற்றும் துறைரீதியான நடவடி க்கை எடுக்கப்படும்.
7. விபத்தில் சிக்கியவ ர்களுக்கு உதவிய வர்கள் தாமாக சாட்சி சொல்ல விரும்பும் போது, காவல் துறை அவரிடம் ஒருமுறை மட்டும் விசாரி க்கலாம்.
விசாரணை யில் துன்புறு த்தலோ கட்டாயப் படுத்தலோ இருக்கக் கூடாது.
8. விபத்தில் சிக்கியவர்க ளுக்கு உதவிய நபர்,
காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவி னராக இல்லாத பட்சத்தில், அவரிடம் இருந்து அனுமதி மற்றும்
பதிவு செய்வதற்கான
செலவின த்தை செலுத்து மாறு தனியார் மற்றும் பொது மருத்துவ மனைகள் கேட்கக் கூடாது. காயம டைந்தவர்க ளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
9. சாலை விபத்தில் அவசர சிகிச்சை அளிக்கப் பட வேண்டிய நிலையில், மருத்துவர் அக்கறை செலுத்தா விட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடி க்கை எடுக்கப் படும்.
10. அனைத்து மருத்துவ மனைக ளின் நுழைவு வாயி லிலும் விபத்தில் சிக்கியவர் களுக்கு உதவிய வர்கள் கைது நடவடிக் கைக்கு ஆளாக மாட்டார்கள்.
பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை க்காக வைப்புத் தொகை செலுத்த வேண்டிய தில்லை என்பதை தெளிவு படுத்தி அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.
11. விபத்து இடர்ப்பா டுகளில் சிக்கியவர் களுக்கு உதவி செய்ப வர்கள் கேட்டால், அவர்களு க்கு மருத்துவ மனை நிர்வாகம், காயமடை ந்தவர்களை மருத்துவ மனையில் சேர்த்த நேரம்,
விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் நாள் தொடர் பான அறிக் கையை வழங்கலாம். இதற்கு மாநில அரசு நிலை யான படிவம் தயாரித்து அனைத்து மருத்துவ மனைக ளுக்கும் வழங்க வேண்டும்.
12. அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவ மனைகளும் இந்த நடை முறை களை உடனடியாக செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த விதி முறை களை முழுமை யாக கடை பிடிக்கத் தவறும், விதி முறை களை மீறும் பட்சத்தில் சம்பந்தப் பட்ட அதிகாரி களால் தகுந்த நடவடி க்கை எடுக்க ப்படும்.