ஓ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் !

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் அமைச் சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்குகிறது.
ஓ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறு த்தியும், மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் 

இந்த நேரத்த்தில் அமைச்சரவைக் கூட்டம் நடை பெறுவதால் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

மேலும், தஞ்சை, திருப்பரங் குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதி களுக்கு நவம்பர் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதனால் தேர்தல் குறித்தும், தேர்தல் அதிகாரிகள் நியமனம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். 

அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 27 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் முதல்வர் ஜெயலலிதா வின் துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டது. 

இந்நிலையில், முதன் முறையாக ஓ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் புதன் கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings