சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக் காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பர மாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுக ளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க் கலாம்
இயந்தி ரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை, தேவை யான பேப்பர், உற்பத்தி யான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3 ஆயிரம்).
முதலீடு:
பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்), பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய இஞ்ச் அளவு களில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வத ற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.
உற்பத்தி பொருட்கள்
பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர் நைஸ் (டன் ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர் திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங் கவர், லேபிள், செலோ டேப். கிடைக்கும்.
இடங்கள்
பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங் களிலும், பேப்பர் களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளா விலும் மலிவாக கிடைக் கின்றன.
உற்பத்தி செலவு
வாடகை, மின் கட்டணம், உற்பத்தி பொருட்கள், கூலி உள்பட பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ.1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30,
சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட் தயாரிக்க ஆகும் செலவு ரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம் தேவை.
வருவாய்
ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்ப தால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு: கேட்டரிங் நடத்து பவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்கு கிறார்கள்.
அவர்களு க்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளு க்கும் சப்ளை செய்ய லாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகு முறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.
தயாரிப்பு முறை
பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டா வது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சார த்தில் இயங்கக் கூடியவை.
தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக் குரிய கட்டிங் வளைய த்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டு க்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும்.
வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணி க்கை வரையும் திக் ரகமென் றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம்.
கட் செய்த பேப்பர் களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கி னால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட் களாக மாறும்.
பேப்பரை பிளேட் டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத் தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.
நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட் களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனை க்கு தயார்.
பேப்பர் பிளேட் இயந்திர ங்களை விற்பனைய கங்களில் பார்வை யிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம்.
எளிய தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகா ப்புக்கு உத்தர வாதம் அளிக்கும் இந்த தொழிலு க்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்கு கின்றன.