மின்சாரக் கட்டணத்தை குறைக்க கோவை போலீஸார் முயற்சி !

அதிகமாக ஏற்படும் மின்சாரக் கட்டணச் செலவைக் குறைக்கும் முயற்சியில் கோவை நகரப் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 
மின்சாரக் கட்டணத்தை குறைக்க கோவை போலீஸார் முயற்சி !
காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், 45 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய திறன் கொண்ட சோலார் பவர் பேனல்களை நிறுவியுள்ளனர்.

இந்த திட்டம் மூலம் தமிழ் நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சோலார் எனர்ஜி விநியோகிக்கப்படும். மேலும், மின்சாரக் கட்டணத்தையும் சேமிக்க முடியும்.

இப்போது வரை கோவை நகர போலீஸார், ஒரு மாதத் துக்கு ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் வரை மின் கட்டணம் செலுத்து கின்றனர். 

சோலார் எனர்ஜி உற்பத்தி தொடங்கிய பிறகு, ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை மட்டுமே ஒரு மாதத்துக்கான மின் கட்டணம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் அலுவலகத்தில், மும்முனை இணைப்பு உள்ளது. அலுவலக வளாகத்தில் ஐந்து மாடி பிரதான கட்டடம் மற்றும் அதைச் சுற்றி மற்ற நான்கு கட்டடங்கள் அமைந் துள்ளது. 

வணிக மின் கட்டணத் தின் கீழ் மாநில மின்சார வாரியம் கட்டணத்தை வசூலிக்கிறது. 

ஐந்து மாடி பிரதான கட்டட த்தில் உள்ள வீடுகளில் போலீஸ் அதிகாரிகளு க்கான அறைகள் மற்றும் பல்வேறு முக்கியமான பிற பிரிவுகளும் உள்ளன. 
முக்கிய கட்டடம் மட்டும் ஒரு மாதத்திறுகு ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள மின்சாரத்தை பயன் படுத்துகிறது.

எனவே, இதை குறைக்கும் விதமாக, மொட்டை மாடியில் போது மான இடம் உள்ளதால் அங்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டது. 

அந்த சோலார் பேனல்கள் 45 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய திறன் கொண்டவை.

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனுமதி அளித்த பின் மின் உற்பத்தி தொடங்கப்படும் மற்றும் அந்த சோலார் எனர்ஜி 

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு விநியோகி க்கப்படும் என காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பயன்படுத்தும் மின்சார அளவையும், உற்பத்தி செய்யப்படும் சோலார் எனர்ஜியையும் மற்றும் மாநில 

மின்சார வாரியத்துக்கு விநியோகிக்கும் மின்சாரத்தையும் கண் காணிக்க மீட்டர் அமைத்துள்ளோம். 
உற்பத்தி ஆற்றல் அளவு அடிப்படையிலும், மாநில மின்சார வாரியத்துக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் அடிப்ப டையிலும் கட்டணங்களைக் கழிப்போம். 

சோலார் எனர்ஜி பயன்பாட்டுக்குப் பிறகு மாதம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை மட்டுமே மின்சாரக் கட்டணம் வரும்.

மேலும், வளாகத்தில் உள்ள பிற கட்டடங்களிலும் சோலார் பேனல்களை நிறுவத்திட்டம் உள்ளது என்று அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 

சோலார் பேனல்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை நாங்கள் பேட்டரிகளில் சேமிக்க போவதில்லை. அதை நேரடியாக மாநில மின்வாரியத்துக்கு விநியோகிக்க திட்ட மிட்டுள்ளோம். 
இந்த திட்டத்துக்கு எங்களுக்கு ரூபாய் 40 லட்சம் செலவு ஏற்படும். இதற்கான நிதி கோயம்புத்தூர் தெற்கு எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப் படும்” என்றும் தெரிவித் துள்ளார். 

அனைத்து அரசு அலுவல கங்களும் இதே போல் செய்தால், மின்சாரம் பெரும் பிரச்னை யாக இருக்காது என அங்குள்ள பொது மக்கள் கூறினர்.
Tags:
Privacy and cookie settings