ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பும் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம் !

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 
கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தேவையி ல்லாத வதந்திகள் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட வற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.

புதுவையை சேர்ந்த தமிழச்சி என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த பதிவை போட்டதற்காக அவருக்கு எதிராக இணைய தளங்களில் கண்டனங்களும் குவிந்தன.

இது தொடர்பாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலவலகத்தில் புகார் செய்யப் பட்டது. இதனை யடுத்து தமிழச்சி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங் குன்றம் போலீசாரும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது போன்று வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் முதல் அமைச்சரின் உடல்நிலை பற்றிய வதந்தி அவ்வப் போது இணைய தளங்கள் மூலமாக பரப்பப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

இது போன்ற வதந்திகளை இணைய தளம் வாயிலாக பரப்புபவர்களை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை இதனை பரப்பி விடுவதும் தெரிய வந்துள்ளது. 

அவர்கள் அனைவரையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

30-க்கும் மேற்பட்ட வர்கள் இ-மெயில் மூலமா கவும் புகார் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings