இரவு நேரங்களில் இணையம் பயன்படுத்த தடை !

சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க இரவு நேரங்களில் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இணையம் பயன்படுத்த தடை !
சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேம்களுக்கு அடிமை யாகி வருவதை தொடர்ந்து அந்நாட்டு சைபர்ஸ் பேஸ் துறையினர் சிறுவர்கள் இரவு நேரங்களில் ஆன்லைன் கேம்கள் விளை யாடத் தடை விதித் துள்ளது. 

சிறுவர்கள் இணையத் துக்கு அடிமையாவதை தடுப்ப தற்காக இந்த நடவடி க்கை எடுக்கப் பட்டுள்ள தாக சீன அரசு விளக்கம் அளித்து ள்ளது.

சீனாவின் இணையதள தகவல் மையம் அளித்த தகவலில், சீனாவில் இணையம் பயன் படுத்துபவர் களில் 23% பேர் 18 வயதுக்கு கிழ் உள்ள வர்கள்" என்று கூறி யுள்ளது.

சீனாவில் இளைஞர்கள் இணையத்துக்கு அடிமையாகி வருவது குறித்து சீன வழக்கறிஞர் ஒருவர் கூறும் போது, சீனாவில் இணையத்துக்கு அடிமையா னவர்களுக்கு என சீர்திருத்த மையங்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது.
இந்த மையங்களில் சேர்க்கப்படும் சிறுவர் களுக்கு கடுமை யான தண்டனைகள் வழங்கப்படுவதாக குற்றஞ் சாட்டு எழுந்து வருகிறது. இது சீன இளைஞர்களின் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார்.

சீனாவில் இந்தத் தடைக்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித் தாலும். ஆன் லைன் கேம் நிறுவன ங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings