எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

வாழ்க்கைல ஒரு முறையாவது போய் பார்த்து விட வேண்டும் என்னும் இடங்களில் ஒன்று தான் எகிப்து பிரமிடு.

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?
அதன் பிரம்மாண்டத்தை புகைப்படத்திலோ அல்லது திரைப்படத்திலோ கூட சரியாக காட்டப்படவில்லை அகழ்வாராச்சியாளர்களின் சொர்க்கம் எகிப்து. 

எகிப்திய பிரமிடுகளின் பிரம்மாண்டம் அதன் சுவாரசியம்! கெய்ரோ நகருக்கு வெளியே கட்டப்பட்டுள்ள அவற்றின் அளவு நம்மை அசத்தி விடும். 

அவ்வளவு பெரிய கட்டிடத்தைக் கட்ட அவர்கள் பயன்படுத்தியுள்ள பிரம்மாண்டக் கற்கள் எங்கிருந்து, எப்படி வந்திருக்கும் என்பது பெருவியப்பு. 

இவை எகிப்தின் எல்லையிலுள்ள மலைகளிலிருந்து வெட்டப்பட்டு, கட்டு மரங்களில் நைல் நதி வழியே தருவிக்கப்பட்டன என்பது மற்றொரு பிரமிக்க வைக்கும் உண்மை. 

இரத்த அழுத்த நோயை சைலண்ட் கில்லர் என்று சொல்ல காரணம் என்ன?

அந்தக் கற்களை அவ்வளவு உயரம் வரை எப்படிஎடுத்துச் சென்று கட்டியிருப்பார்கள் என்பது மலைக்கச் செய்கிறது. 

பிரமிடுகளின் உள்ளே செல்லும் வளைவுகள் நம்மைப் பிரமிக்கச் செய்வதென்னவோ நிசம். இது பட்டைக் கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும்.

எங்கு தோண்டினாலும் பழைமையான சின்னங்கள் அல்லது ஒரு நகரமே கூட கிட்டும். நவம்பர் 2008 வரை மட்டும் 118 பிரமிட்கள் கண்டறியப் பட்டுள்ளது. 

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

ஜோஸேர் பிரமிட் தான் எகிப்து வின் முதன்மையான பிரமிடாக கருதப்படுகிறது. காலம் கி.மு 27 ஆம் நூற்றாண்டு. கிஸா மேட்டுநிலத்தில் இருக்கும் 3 பிரமிட்கள் தான் இன்றளவும் பிரபலம். 

அதில் மிக உயரமானது கூபு வின் பிரமிட், பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது.

சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. அதற்கு அடுத்தது, காப்ஃரே வின் பிரமிட், 

அதற்கு அடுத்தது மென்குரே வின் பிரமிட். கட்டப்பட்ட காலத்தில் இருந்து, அடுத்த 3800 வருடங்களுக்கு மனிதனால் மிக உயரமாக உருவாக்கப்பட்ட அமைப்பு இது தான். 

இந்த பிரமிட்கள் மிக உயரம் மட்டுமல்ல மிகுந்த அலங்காரத்துடனும் கட்டப்பட்டது. 

கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரிய பிரமிடில் 2.5 tonnes (5,500 lb) இலிருந்து 15 tonnes (33,000 lb) வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது.

இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230 மீ (755 அடி) நீளமுடையதாக உள்ளது. இதன் உயரம் கட்டப்பட்ட போது 146.5 மீ (488 அடி)யாக இருந்தது.

ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 137 மீ (455 அடி)யாக உள்ளது. 

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

இருப்பினும் இதுவே மிக உயரமான பிரமிடாக விளங்குகிறது. பெரிய பிரமிடின் அடித்தளத்தின் அளவு 52,600 சதுர மீட்டர்களாம். 

அதாவது 566,000 சதுர அடி. ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடி. அப்படி எனில் 5,66,000 சதுர அடி என்பது ஏறக்குறைய 13 ஏக்கர் அளவில் அமைந்தது. 

ஒரு ஏக்கர் என்பதே 18 க்ரவுன்ட் நிலம் அதை ஒரு சுற்று நடந்து வருவது சற்று கடினமாக இருக்கும். 13 ஏக்கர் எனில் கற்பனை செய்து பாருங்கள். 

கி.மு. 2500 களில் இது சாத்தியம் என்பது கற்பனைக்கு எட்டாதது. பிரமிடுகள் 4000 பணியாளர்களைக் கொண்டு 20 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. 

கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

தற்போதைய நவீன இயந்திரங்கள் கொண்டு கட்டினாலும் 1500-2000 பணியாளர்களுடன் 5 ஆண்டுகள் ஆகுமாம். 

அதே போன்ற பிரமிடுகளை உருவாக்க வெறும் 500 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் அதாகப்பட்டது 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும்.

இப்பொது உள்ள பிரமிட், காலத்தாலும், கொள்ளையர்களாலும், வேறு கட்டிடங்களுக்காக கற்கள் உடைக்கப்பட்டும் சிதிலமடைந்துள்ளது.

தற்போது உள்ள கிஸா பிரமிட்கள் மீது ஏறுவது சட்டப்படி குற்றமாகும். 3 வருடம் சிறை அல்லது எகிப்து வருவதற்கு வாழ்நாள் தடை கூட கிடைக்கலாம்.

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

1960 கள் வரை இந்த தடைகள் எல்லாம் இல்லை. உலகம் முழுவதில் இருந்தும் சுற்றுலா வந்த மக்கள் ஏறிக்கொண்டு தான் இருந்தார்கள். 

பின்பு ஏன்? கடந்த 200 வருடங்களில் மட்டும் பிரமிட் ன் உச்சியை அடைகிறேன் பேர்வழி என்று விபத்தில் இறந்தவர்கள் 1600 பேர் (தெரிந்தது). 

பலர் திருட்டுத்தனமாகவும், அங்கு இருக்கும் காவலர்களுக்கு பணம் கொடுத்து இன்றும் ஏறுகிறார்கள். பிரமிட் மீது ஏறுவது அவ்வளவு ஆபத்தானதா? 51 டிகிரி சாய்வு, 203 அடுக்குகள். 

ஒரு சாதாரண மனிதனால் 40 அல்லது 60 நிமிடத்தில் உச்சிவரை ஏறமுடியும். ஏறுவது பிரச்சனை இல்லை. இறங்குவதுதான் பிரச்சனை. 

பெரும்பாலும் குதித்து தான் இறங்க முடியும். 6 அடிக்கும் உயரமான கற்கள் ஆங்காங்கே உடைந்து இருக்கும். 

மணல் தேங்கி இருக்கும் அடுக்குகளில் கால் இடரும் வாய்ப்பு அதிகம். அப்படி இடறினால் நிலை தடுமாறி தரை வரை விழுவதற்கு வாய்ப்புண்டு. இறங்குவது தான் கடினம்.

அன்றைய கிஸா பிரமிட்கள் இப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. 

ஏறத்தாழ 23 லட்சம் கிரானைட் கற்களை அஸ்வான் நகரத்திலிருந்து கொண்டு வந்து, சீராக அடுக்கி, நான்கு புறமும் 51 டிகிரி சாய்வு கோணத்தில் எழுப்பி, 

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

சுண்ணாம்பு உரைக்கற்களால் மூடப்பட்டு, உச்சியில் ஒரு சின்ன ஒற்றைக்கல் பிரமிட் ஒன்றை தங்க மூலம் பூசி வைக்கப்பட்டு கட்டப்பட்டது. 

சூரியனின் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. வெளிப்புறம் சமமாகவும் சறுக்கலாகவும் இருக்கும். பிரமிட் மீது, கி.மு வில் ஏறுவது கடினம் கி.பி யில் இறங்குவது கடினம்.

இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்? ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள்? என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

சோம்பு சேர்த்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?

தற்கால எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் புறப் பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை.

உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத செய்திகளை உள்ளடக்கியது.

ஐநூறு அடி உயரம் கொண்ட இந்தப் பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்புப் பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது.

இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.

இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், 

அத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. புற கற்களில் வித்தியாசமான எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பிதாகரஸ் என்கிற கணித விதிகளின் படியும், பிரபஞ்சத்தில் உள்ள 

மூன்று ஓரின நட்சத்திரங்களைக் குறிக்கின்ற துல்லியக் கோட்பாட்டின் படியும் அமைக்கப்பட்டு உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரமிடின் உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது.

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற

சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.

2004ம் ஆண்டு இத்தகைய சதுரத் துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள எந்திர மனிதனை (ரோபோட்) உள்ளே செலுத்தி 

உலகம் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்ட போது, உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது.

இவற்றைத் திறக்கவும் அதற்குப் பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வுக் குழுக்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் செய்வது எப்படி?

வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ள பிரமிடின் கூம்பகங்களை பண்டைக் கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப்பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், 

மருத்துவ அறிவுத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.

எகிப்து பிரமிடுகளின் ரகசியம் என்ன? எகிப்தியர்கள் எப்படி பிரமிடுகளை உருவாக்கினர்?

எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன.

அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.

ஹெல்தியான சிவப்பு அவல் தரும் நன்மைகள் !

அவற்றில் நழுவிச் சென்ற சில கணிதத் துணுக்குகளைத் தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க அறிஞர் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய முடிகிறது.

பிரமிடுகளும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் போல கற்தூண் காலங்காட்டியாக கருதப்படுகின்றன.

Tags:
Privacy and cookie settings