சாலையோர சேவை..டி.வி.எஸ் !

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தங்களது வாடிக்கையா ளர்களுக்கு 24 மணி நேரமும் சாலையோர சேவை வழங்கும் திட்டத்தை அறி முகப்படுத் தியுள்ளது.
சாலையோர சேவை..டி.வி.எஸ் !
ஒசூரை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கி வரும் டி.வி.எஸ். மோட் டார்ஸ் நிறுவனம், இரு சக்கர வாகனங் களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

பிற இந்திய மோட்டார் சைக்கிள் வாகன நிறுவனங் களை விட டி.வி.எஸ். தங்களது வாடிக்கை யாளர்க ளின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னோ டியாக விளங்கு கிறது.

இதன் படி, சாலையில் செல்லும் போது திடீரென வாகனங் களில் ஏற்படும் கோளாறு களுக்கு சேவை வழங்கும் 24 மணிநேர உதவித் திட்டத்தை டி.வி.எஸ். அறிமுகம் செய்து ள்ளது. 

இதன் படி எரிபொருள் தேவை, பழுது நீக்குதல் உள்ளிட்ட தேவை களை உடனடி யாக நிறை வேற்றித் தரும் வசதியை ஏற்படுத்தி யுள்ளது 

டி.வி.எஸ். இந்த சேவையைப் பெறுவ தற்கு 1800 419 2077 என்ற டோல்ஃபிரீ எண்ணை அழைத்தால் போதும். இத்திட்டம் முதற்கட் டமாக இந்தியா வின் 70 நகரங்களில் செயல் படுத்தப்பட்டுள்ளது. 

அதி விரைவில் அதாவது, அக்டோபர் மாத இறுதிக்குள் 200 இந்திய நகரங் களில் இச்சேவை யை விரிவுபடு த்துவதாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அறிவி த்துள்ளது. 
இத்திட்டத்தில் சாலையில் டி.வி.எஸ். வாகனங்கள் முழுவதும் பழுதடைந்து நின்று விட்டால், அவர்களுக்கு டாக்ஸி வசதியும் ஏற்படுத்தி தரப்படுகிறது. 

விபத்துகள் ஏற்பட் டாலும் அந்த வாகன த்தை எடுத்துச் செல்ல ’டோவிங்’ வசதியும் வழங்க ப்படுகிறது.

இது குறித்து டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தின் விற்பனை மற்றும் சேவைப் பிரிவு துணைத் தலைவர் ஜே.எஸ்.சீனி வாசன் கூறுகை யில், ”எங்களது நிறுவன த்துக்கு நாடு முழுவதும் 3,500 டீலர்கள் உள்ளனர்.

இதனால் வாடிக்கை யாளர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும் போது, 24 மணி நேரமும் சிறப்பான சேவை வழங்க முடியும் என்றார். 

டி.வி.எஸ். போலவே ராயல் என்ஃபீல்டு நிறுவ னமும் சாலை யோர கோளாறு களுக்கு சேவை வழங்கி வருகிறது. 
ஆனால் இந்த சேவை யைப் பெறுவதற்கு ராயல் என்ஃபீல்டு வாகன ஓட்டிகள் முன் கூட்டியே குறிப்பிட்ட தொகை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings