உடல்நலக் குறைவினால் அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் செவ்வாய் கிழமை இரவு பார்க்க வந்துள்ளனர்.
ஆனால், அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தார்களா? இல்லையா? என்ற தகவல் உறுதிப்படுத்தப் படவில்லை.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 22ம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா வுடன் அப்பல்லோ மருத்துவ மனையில் தங்கி இருக்கும் அவரது தோழி சசிகலா தற்போது தினமும் இரவு வீட்டுக்கு சென்று ஒரு மணி நேரத்தில் திரும்புவதாக கூறப் படுகிறது.
ஜெயலலலிதா வை மருத்துவ மனையில் சசிகலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசி இருவரும் கவனித்துக் கொள்வதாக செய்தி வெளியானது.
இவர்களைத் தவிர இதுவரை முதல்வரை யாரும் நேரில் பார்த்ததாக உறுதியான தகவல்கள் வெளியாக வில்லை.
அப்பல்லோ மருத்துவ மனை சார்பில் தினமும் மாலை நேரத்தில் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இதுவரை வெளியான தகவலில் தற்போது உடல் நலமடைந்து வருவதாகவும், அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வருவதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
அப்பல்லோ வில் சிகிச்சை முதலில் காய்ச்சலில் துவங்கி தற்போது மூச்சு திணறல், கிருமி தொற்று, செயற்கை சுவாசம் அவ்வப்போது அவருக்கு அளிக்கப் படுகிறது என்ற தகவலை மருத்துவ நிர்வாகம் வெளியிட் டுள்ளது.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் வழி காட்டுதலின் படி சிகிச்சை தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரையும் அவர்கள் பார்க்க அனுமதிப்பதும் இல்லை.
தொற்று நோய் வல்லுநர் டாக்டர் ராம சுப்பிரமணியன், ஜெயலலிதா வின் ஆஸ்தான டாக்டர்கள் சாந்தாராம், பி.சி.ரெட்டி ஆகியோர்
தலைமையில் செயல்படும் டாக்டர்கள் குழு ஜெயலலிதா வின் உடல் நிலையைக் கவனித்துக் கொள்கிறது.
யாருக்கும் அனுமதியில்லை கடந்த 14 தினங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தாலும், மருத்துவ குழுவினர், சசிகலா, இளவரசி தவிர வேறு யாரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப் படவில்லை.
சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் வேறு அறைக்குப் போகச் சொல்லி விட்டனர். முதல்வரை கவனித்துக் கொள்ளும் பணியாளர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப் பட்டிருக்கின்றன.
அதோடு டாக்டர்களின் செல்போன் எண்களையும் போலீஸ் வாங்கி வைத்திரு க்கிறது.
சசிகலா குடும்பம் இந்நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவ மனைக்கு சசிகலாவின் நெருங்கிய உறவினர் களான டி.டி.வி. தினகரன்
மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி, சசிகலா வழக்கறிஞர், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்து சென்று ள்ளனர்.
ஜெய் ஆனந்த் இரவு 9மணி அளவில் காரில் வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காரில் மருத்துவ மனைக்கு வந்து சென்றுள்ளார்.
முதல்வரை சந்தித்தார் களா? இவர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா வை சந்தித்தார் களா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாக வில்லை.
அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 14 நாட்களாக மருத்துவ மனை வாசலில் காத்திருக்கின்றனர்.
இத்தனை நாட்களாக மருத்துவமனை பக்கமே எட்டிப் பார்க்காத சசிகலா குடும்பத்தினர் திடீரென அப்பல்லோ விற்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.