படங்கள் வரைதல் தேவை அதிகமாக இருக்கும் கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையின ருக்காக, தொழிழ் நுட்ப சந்தையில் ‘இங்க்லிங் ஸ்கேனர்’ எனப்படும் சிறிய வகை ஸ்கேனர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
அனிமேஷன் துறை யினர் மத்தியில் ரொம்பவே பிரபல மான wacom நிறுவனம் தங்களு டைய புதிய படைப்பை அறிமுகப் படுத்தியிரு க்கிறது.
இங்க் லிங்க் என்று பெயர் வைக்கப் பட்டிருக்கக் கூடிய இந்த புதிய படைப் பானது முற்றிலு மாக ஸ்கேனர் போன்று செயல் படக் கூடியது.
இந்த ஸ்கேன ரோடு ப்ரெஷர் சென்சிடிவ் பேனா ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது. இந்த டிவைஸ் மூலமாக நாம் வரையும் பொழுதே வரையும் படத்தை எளிதாக ஸ்கேன் செய்ய முடியும்
படம் வரைவதற் கான காகிதத்தை தேர்வு செய்த பிறகு அதன் மேல் இந்த டிவைசை பொருத்தி விட வேண்டும்.
இதனோடு கொடுக்கப் பட்டுள்ள இந்த பேனாவை பயன் படுத்தி காகிதத் தில் படங்களை வரைந்து கொண்டிரு க்கும் பொழுதே இதில் ஸ்கேன் செய்யப் படுகிறது,
இங்க் லிங் டிவைசில் கொடுக்கப் பட்டிருக்க கூடிய பட்டனை அழுத்தி னால் புதிய லேயர்கள் உருவாகும். இதன் மூலமாக நாம் மற்றொரு புதிய படங் களை வரைய முடியும்.
நாம் எத்தனை படங்கள் வரைந் தாலும் அதனை டேட்டா கேபிள் மூலம் மொபைல், லேப்டாப் என எந்த டிவைசு க்கு வேண்டு மானாலும் மாற்றிக் கொள்ள லாம்.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கிற இந்த இங்க் லிங் கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையில் இருக்கும் பலரை வெகுவாக கவர்ந்தி ருக்கிறது.