பாத்திரம் கழுவும் இயந்திரமாக கிரைண்டரை மாற்றி அமைத்த மாணவி !

முத்துப்பேட்டை பள்ளி மாணவி கிரைண்டரை பயன்படுத்தி பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வடிவமைத் துள்ளார்.
பாத்திரம் கழுவும் இயந்திரமாக  கிரைண்டரை மாற்றி அமைத்த மாணவி !
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்பு படிப்பவர் பவித்ரா. 

இவர் மாவு அரைக்க பயன்படும் கிரைண்டரை பயன்படுத்தி எளிய முறையில் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வடிவமைத் துள்ளார்.

இதில் மாவு அரைக்கும் கல்லை அகற்றி விட்டு அதில் பாட்டில் கழுவும் பிரஸ் சிலவற்றை ஒன்றாக இணைத்து கைப்பிடி மூலம் தேவைக் கேற்ப திருப்புவது போன்று அமைத் துள்ளார்.
முட்டையை இப்படி தான் சமைக்கனுமாம், அது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது !
கிரைண்டரில் தேவைக்கேற்ப தண்ணீர் நிரப்பி, கழுவி முடித்த பின் அசுத்தமான தண்ணீரை வெளியேற்ற ஒரு பைப்பும் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த இயந்திரம் நன்னிலத்தில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் தேர்வு பெற்ற 16 கண்டு பிடிப்புக ளில் ஒன்றாக தேர்வு பெற்றது.

இந்நிலையில் பவித்ராவுக்கு பாராட்டு நிகழ்ச்சி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடை பெற்றது. இதில் மாணவி இயந்திரத்தை இயக்கி செயல் விளக்கம் அளித்தார்.
தலைமை யாசிரியை வாசுகி, அறிவியல் ஆசிரியர் சுரேஷ் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் மாணவியை பாராட்டினர்.

இதுபற்றி மாணவி பவித்ரா கூறுகையில், நான் உருவாக்கி உள்ள இந்த இயந்திரம், நாளை இந்த உலகில் வரப்போகும் ஒரு பயனுள்ள இயந்திரம்.
பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !
துணி துவைக்க, மாவு அரைக்க, சமைக்க, எண்ணற்ற கருவிகள் வந்த போதும் பாத்திரங்களை கழுவுவதற்கு கருவிகள் நடைமுறையில் இல்லாதது குறையாகவே இருந்து வந்தது.

இதன் மூலம் தினம் வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவுவதற்கு இனி பெண்கள் கஷ்டபட வேண்டாம். 

மேலும் இது ஒரு சோதனை முயற்சியே. இதில் மேலும் சில அம்சங்களை சேர்க்க உள்ளேன் என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings